கட்டின புருஷன் கிட்ட நாடகம் ஆடி பணத்தைக் கரந்த ரோகிணி.. செல்வத்திடம் மீனா சொன்ன வார்த்தை முத்துவுக்கு தெரியவரும் உண்மை..

siragadikka aasai september 14 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது மனோஜ் உன் பிரண்டு கிட்ட பணத்தை கொடுத்து எப்படி வாங்குவது ஏமாத்திட்டு போயிட்டா என்ன பண்றது என கேட்க என்ன நீ நம்ப மாட்டியா என ரோகிணி கேட்கிறார் அதற்கு மனோஜ் நான் முழுசா நம்புவது உன்னையும் என்னோட அம்மாவையும் தான் என கூறுகிறார்.

வேணும்னா இப்படி பண்ணலாம் உன் பிரண்டு கிட்ட சொல்லிடு இன்ட்ரஸ்ட்க்கு வேணா பணம் கொடுக்கலாம் மூன்று வட்டி என கூறியவுடன் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். ஆமாம் அப்பொழுது தான் நமக்கும் லாபம் இருக்கும் என பேசுகிறார். உடனே ரோகினி சந்தோஷத்தில்  துள்ளி குதிக்கிறார் அடுத்த நாள் ரோகிணி ஷோரூமுக்கு வந்து தன்னுடைய தோழிக்கு பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்ப போகும் நேரத்தில் ரோகினியின் தோழி வித்யா வருகிறார்.

உடனே வித்தியா அழுது கொண்டு என்னுடைய அம்மாவுக்கு ஆப்ரேஷன் அர்ஜெண்டாக 75 ஆயிரம் தேவை கொடுக்க முடியுமா என கேட்கிறார்.ஆனால் ரோகிணி என்னிடம் பணம் இல்லை எனக் கூறுகிறார். உடனே வித்யா உன்ன விட்டா நான் யாருகிட்ட கேட்கிறது எனக்கு எதுவுமே தெரியாதா நான் அழுது கொண்டிருக்கிறேன் அதை பார்த்த மனோஜ் ரோகினி அழைத்து உன் பிரண்டு வித்யாவுக்கு நான் காசு கொடுக்கிறேன் என கூறுகிறார்.

ஆனால் ரோகிணி இடம் இன்ட்ரஸ்ட்க்கு தான் கொடுப்பேன் அதை அவரிடம் சொல்லிவிடு என கூறுகிறார் உடனே பணத்தை அக்கவுண்டில் போட்டு விடுகிறேன் என மனோஜ் கூற இருவரும் வெளியே செல்கிறார்கள். வெளியே சென்ற ரோகிணி மற்றும் திவ்யா இருவரும் இவ்வளவு ஈசியா மனோஜ் ஏமாத்த முடியும்னு தெரியாம போச்சே என பேசிக்கொள்கிறார்கள் நீ இப்படியே வாழ்க்கைல மனோஜ் ஏமாத்திக்கிட்டே இரு கடைசியில் என்ன நடக்கப்போகுதோ என பயமுறுத்துகிறார் வித்யா.

மற்றொரு காட்சியில் மீனா செல்வத்திடம் வந்து ஆடம்பரத்துக்கும் அத்தியாயவாசியத்துக்கும் வித்யாசம் இருக்கு அண்ணா  உங்க தங்கச்சியா நினைகிறதால நான் சொல்றேன் தேவையான செலவு மட்டும் பாருங்க இவ்ளோ கடன் வாங்கி நம்ம செலவு பண்ணிட்டு திரும்ப கஷ்டப்படுறது நம்ம செய்ற பெரிய தப்பு இது அட்வைஸா எடுத்துக்கிட்டாலும் பரவால்ல ஆனா அவரு தான் முன்ன பின்ன யோசிக்காம பேசினாருன்னா நீங்களும் அதே மாதிரி பேசாதீங்க என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

உடனே அடுத்ததாக முத்து செல்வத்திடம் பணத்தை கொடுக்க செல்வம் வாங்க மறுக்கிறார். அதுமட்டுமில்லாமல் பங்க்ஷன் வைக்கவில்லை சிம்பிளாக முடித்துக் கொள்கிறேன் என கூறுகிறார் இதனால் முத்துக்கு சந்தேகம் வருகிறது இத்துடன் எபிசோட் முடிகிறது.