பண விஷயத்தில் ரோகினிக்கு விபூதி அடித்த மனோஜ்… செல்வத்திடம் நேராக பேசி புரிய வைத்த மீனா.. தவியாய் தவிக்கும் முத்து.

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் செட்டில் உள்ளவர்களிடம் செல்வத்துக்கு ஒரு அவசரம் காசு கொடுக்கணும் என்று மீனாவிடம் கேட்டேன் எதற்கு தேவையில்லாத செலவுக்கு நீ காசு கொடுக்கணும் என கேட்டுவிட்டால் என்று அனைவரிடமும் கூறுகிறார்.

அதே போல் செட்டில் உள்ளவர்களிடம் உங்களிடம் எவ்வளவு காசு இருக்கிறது கொடுங்கள் என கேட்கிறார் எங்களிடம் எங்கு காசு இருக்கிறது இப்பதான் டீசல் போட்டேன் கார் வாடகை கட்டினேன் வீட்டு வாடகை கொடுத்தேன் என அனைவரும் ஆளாளுக்கு ஒன்று கூற கடைசியாக கையில் உள்ள பணம் 6 ஆயிரத்தை எடுத்துக் கொடுக்கிறார்கள்.

உடனே நீங்க உங்களால முடிஞ்சது கொடுங்க நான் எப்படியாவது அரேஞ்ச் பண்ணுகிறேன் என சொல்லிவிட்டு முத்து கிளம்புகிறார் அதற்குள் அவருடைய நண்பர் நீ பணம் தருவேன் என்று மிகவும் உறுதியாக இருக்கிறான் செல்வம் நீ கொடுக்கவில்லை என்றால் உடைந்து போய் மீண்டும் குடிக்க ஆரம்பித்து விடுவான் என பேசுகிறார்கள்.

முத்து காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார் அதேபோல் ரோகினி இடம் வித்யா வீட்டு ஓனர் அட்வான்ஸ் கேட்டு கால் பண்ணினார் என கூறுகிறார் உடனே ரோகிணி மனோஜிடம் என்னுடைய தோழிக்கு அவசரமாக ஒரு லட்சம் தேவை பணம் கொடுக்க முடியுமா எனக் கேட்க மனோஜ் முடியாது என மறுக்கிறார்.

உன் தோழிக்கு அவசரம் என்பதற்காக எல்லாம் என்னால் பணம் கொடுக்க முடியாது. பணம் என்ன மரத்திலேயே காய்கிறது நீ சத்தியம் பண்ணி இருந்தால் அதனை வாபஸ் வாங்கி கொள் என மனோஜ் திட்டவட்டமாக கூறுகிறார் அப்பொழுது ரோகிணி ஜீவாவிடம் 27 லட்சத்தை தூக்கி கொடுத்தியே அது எந்த நம்பிக்கையில் கொடுத்தார் என பேசுகிறார்.

ரோகிணி எவ்வளவு சொல்லியும் மனோஜ் திட்டவட்டமாக பணம் தர முடியாது என கூறிவிடுகிறார். உடனே முத்து மேலே நின்று கொண்டிருக்கிறார் அப்பொழுது ரவி வருகிறார் என்ன ஜாலியா இருக்கியா என முத்துவை கேட்க முத்து கோபப்படுகிறார் அதே போல் மனோஜ் மேலே வருகிறார்.

அதேபோல் கிச்சனில் மீனா சுருதி ரோகிணி மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் சுருதியிடம் ரோகிணி பணம் கேட்க என்ன செலவு என கேட்கிறார் அதற்கு மீனா அப்படி கேளுங்கள் ஸ்ருதி என கூறுகிறார். இப்படி பண பிரச்சினை அவர்களுக்கு பேசிக் கொண்டிருக்க ஸ்ருதி ஒரு ஐடியா கூறுகிறார் அதாவது பணத்தை சும்மா தர முடியாது வேண்டுமென்றால் இன்ட்ரஸ்ட் கொடுக்கட்டும் அப்படி வேண்டுமென்றால் தரலாம் என கூறுகிறார் உடனே ரோகிணிக்கு எனக்கு ஐடியா கிடைத்துவிட்டது வருகிறேன் என கிளம்புகிறார்.

அதே போல் மீனாவும் எனக்கும் ஐடியா கிடைத்துவிட்டது என கிளம்புகிறார் மேலும் மொட்டை மாடியில் நின்று பேசிக் கொண்டிருக்கும் மனோஜ் மற்றும் முத்துவுக்கு ரவி இதே ஐடியாவை கொடுக்கிறார்கள் உடனே மனோஜ் எனக்கும் ஐடியா கிடைத்துவிட்டது நான் கிளம்புகிறேன் என ரோகினி இடம் வந்து பேச வருகிறார். ஆனால் ரோகிணி முரண்டு பிடிக்கிறார் ரோகினி இடம் இன்ட்ரஸ்ட் பணம் தருகிறேன் என மனோஜ் கூற இருக்கிறார்.

அதேபோல் மீனா செல்வத்தை பார்த்து உங்களால் ஒரு லட்சம் கடன் வாங்கி கொடுக்க முடியுமா அதை கொஞ்சம் யோசிச்சு பாருங்க உங்க தங்கச்சியா இருந்து நான் சொல்லுகிறேன் என செல்வத்திடம் புரிய வைக்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.