பெண் புத்தி பின் புத்தி.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..

siragadikka aasai september 12 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வம் குடித்துவிட்டு கிடப்பதால் அவரிடம் முத்து பேசிக் கொண்டிருக்கிறார் தன்னுடைய அப்பாவிற்கு அறுபதாவது கல்யாணம் பண்ணுவதற்கு என்னிடம் காசு இல்லை என புலம்பி கொண்டிருக்கிறார். உடனே 60தாவது கல்யாணம் பண்ணி விடலாம் என முத்து நம்பிக்கை கொடுக்கிறார்.

அதன் காசு இல்லையே எனக் கூற அதற்கு முத்து நான் ரெடி பண்ணுகிறேன் என கூறிவிட்டு வீட்டிற்கு சென்று மீனாவிடம் பேசுகிறார். உடனே மீனா குடிப்பதற்கு காசு இருக்கிறது ஆனால் இதற்கு மட்டும் காசு இல்லையா என பேச முத்து அதெல்லாம் பரவாயில்லை இப்போதைக்கு என் நண்பனுக்கு காசு கொடுக்கணும் நான் வாக்குறுதி கொடுத்து விட்டேன் என பேசுகிறார்.

நம்மிடம் எங்கு பணம் இருக்கிறது என மீனா கேட்க அதான் ஒரு லட்ச ரூபா பிரைஸ் வின் பண்ணினோமே அதை கொடுக்கலாம் என கூறுகிறார் அதற்கு மேல் அதெல்லாம் முடியாது சிம்பிளா ஏதாவது நடத்திக் கொள்ளட்டும் என மீனா திட்டி விடுகிறார்.

முத்துவும் கோபப்பட்டு கிளம்புகிறார் மீனா பூக்கட்டும் இடத்தில் இருந்து கொண்டு அங்கு இருக்கும் நபர்களிடம் நடந்த சண்டையைக் கூற ஆளாளுக்கு ஒரு வார்த்தையை விடுகிறார்கள். இதனால் மீனா வருத்தப்படுகிறார். அதே போல் மனோஜ் ஒரு செக்யூரிட்டியை அப்பாயின்மென்ட் பண்ணுவதற்காக உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது ஒரு செக்யூரிட்டி வந்தவரை பார்த்து இம்ப்ரஸ் ஆகிறார் மனோஜ்.

அதுமட்டுமில்லாமல் அவர் மனோஜை தூக்கி சுத்திய  போது மனோஜ் கிரு கிரு என தலை சுற்றுகிறது அது மட்டும் இல்லாமல் அந்த பாடிகார்ட் சாப்பாடு லிஸ்ட்டை கொடுத்தவுடன் மனோஜ் பிரம்மிப்பாக பார்க்கிறார் வேறு வழியில்லாமல் இவனை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்கிறார்கள்.

முத்துவுக்கு பணம் கிடைக்கவில்லை என்பதை கார் ஷட்டிற்கு சென்ற அனைவரிடமும் கூறுகிறார் ஆனால் மற்றவர்கள் அவங்க சொல்றதும் கரெக்ட் தான் என பேசுகிறார்கள் ஆனால் முத்து எப்படி பணத்தை பிரட்டுவது என யோசித்துக் கொண்டிருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.