கிரிஸ் ரோகினியின் மகன் எனத் தெரிந்து கொண்ட முத்து.. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சம்பவம்..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ரோகிணியை மாடிக்கு அழைத்து எபொழுது உண்மையை சொல்ல போகிறாய் என கேள்வி கேட்கிறார் அதற்கு மனோஜ் கிரிஸ்டம் நல்லாக பழகினால் சொல்லி விடுவேன் எனக் கூற உடனே மீனா ஏழு நாட்களில் உண்மையை சொல்ல வேண்டும் என கட்டளை இடுகிறார். இதனால் ரோகிணி அதிர்ச்சியாகி நிற்கிறார் மற்றொரு பக்கம் மனோஜ் தன்னுடைய ஷோரூமில் இருக்க அவரிடம் ஜீவா உங்கள் வீட்டில் உள்ள குழந்தையை தத்து கொடுத்தால் 25 லட்சம் கிடைக்கும் என ஐடியா கொடுக்கிறார் இதனால் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

மற்றொரு பக்கம் முத்து சவாரிக்கு சென்று இருவர் கல்யாணியின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு பிரேம் போட வேண்டும் என கூறுகிறார்கள் அதற்கு முத்து அழைத்து செல்கிறார் முத்து திடீரென எதர்ச்சியாக அந்த புகைப்படத்தை பார்க்க அதிர்ச்சி அடைகிறார் யார் என கேட்க இவர்தான் கல்யாணி என் தம்பி பொண்டாட்டி என் தம்பி உயிரோட இல்ல இப்ப கூட கல்யாணிக்கு வேற ஒரு கல்யாணம் ஆயிடுச்சு கல்யாணிக்கு கிரீஸ் என்ற பையனும் இருக்கிறான் என கூறுகிறார்.

இதனால் முத்து அதிர்ச்சியடைந்து குடிப்பதற்கு சென்று விடுகிறார். மற்றொரு பக்கம் ரோகிணி மீனாவை சந்தித்து பேசி இன்னும் கொஞ்சம் டைம் வேண்டும் என கூற அதற்கு முடியாது என மீனா மறுக்கிறார். பாரில் குடித்துக் கொண்டிருக்கும் முத்து வீட்டில் சொல்லப் போவது போல் யோசித்துப் பார்க்கிறார் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கல்யாணி தான் ரோகிணி என கூறுகிறார் இதனால் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.