பொண்டாட்டியை பிரிந்திருக்க முடியாமல் ஓடி வந்த முத்து.. இது விஜயாவுக்கு தெரிந்தால் என்ன நடக்குமோ பயப்படும் மீனாவின் அம்மா

Siragadikka aasai
Siragadikka aasai

Siragadikka Aasai : சின்னத்திரையில் புது புது கதை அம்சத்துடன் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் ஒரு சில சீரியலை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கின்றன அந்த வரிசையில் இடம் பெற்ற சீரியலில் ஒன்று சிறகடிக்க ஆசை இது விஜய் தொலைக்காட்சியில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதில் முத்து மற்றும் மீனா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் படும் பிரபலம். இந்த ஜோடிக்கு என தனி ரசிகர்கள் இருக்கின்றன தனது எதார்த்தமான பேச்சாள் முத்து பலரையும் வெகுவாக கவர்ந்து உள்ளார். மேலும் சின்னத்திரை விஜய் சேதுபதி என்றும் இவரை அழைத்து வருகின்றனர். தினம் தினம் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கின்றன.

அதில் ஆடி மாசத்திற்காக முத்துவும் மீனாவும் பிரிந்து இருக்கின்றனர். இந்த நேரத்தில் முத்து மீனாவிடம் நான் சாப்பிட வரேன் என்று சொன்னதால் மீனா முத்துவிற்காக மீன் வாங்கிட்டு வந்து சமைத்து விருந்துவைத்துள்ளார். அதனை சாப்பிட்டுவிட்டு இங்கேயே தூங்கிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் மீனாவின் அம்மா மட்டும் இது தெரிஞ்சா சம்மந்தி நம்ம கிட்ட சண்டை போடுவாங்களே என்று நினைத்து பதட்டமாகவே இருக்கிறார் இந்த நேரத்தில் முத்துவிற்கு ஒரு ஃபோன் கால் வருகிறது அதனால் திடீரென்று எழுந்து விட்டார் பிறகு உங்க அப்பா உங்களை கூப்பிட மாட்டாங்களா என்று மீனாவுடைய அம்மா கேட்பதற்கு நான் அங்க போனா தானே கூப்பிடுவாங்க..

நான் இங்கே தான் இருக்க போறேன் என்று சொல்லிவிட்டு மீனாவை பாய் எடுத்துட்டு வா நம்ப மொட்டை மாடியில் போய் தூங்கலாம் என்று தூங்க செல்கின்றனர். ஆனால் மீனாவுடைய அம்மா அவர வீட்டுக்கு போக சொல்லு என்று சொல்ல நீயே சொல்லுமா என மீனா சொல்லிவிட்டு முத்து கூட தூங்க செல்கிறார். இந்த விஷயம் விஜயாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை அடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்..