siragadikka aasai may-6 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் விஜயாவை வெளியே போ என்று கூறியது விஜயாவுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது அதனால் விஜயா அழுது கொண்டிருக்கிறார். மேலும் நம் கட்டிய தாயத்து வேலை செய்கிறது என சந்தோஷத்தில் மிதக்கிறாள் ரோகிணி. விஜய் அழுது கொண்டிருப்பதை அனைவரும் பார்த்துவிட்டு என்னாச்சு என கேட்ட விஜயா நடந்ததை கூறுகிறார்.
உடனே அண்ணாமலையும் இதெல்லாம் என்ன என கேட்க முத்து மற்றும் ரவி இருவரும் மனோஜை கூப்பிடுகிறார்கள். மனோஜ் வந்தவுடன் என்ன இப்ப என்ன என கேட்கிறார். சின்ன வயசுல இருந்து அம்மா உன்னை திட்டியது கிடையாது நாங்க தான் அடிக்கடி திட்டு வாங்குவோம் அதே மாதிரி பனிஷ்மென்ட் கொடுப்பாங்க முட்டி போடுவோம் உன்னை இதுவரைக்கும் எதுவுமே சொன்னது இல்லையே ஆனா இப்ப அம்மாவையே நீ வெளியே போனு சொல்லிட்டியே என கேள்வி எழுப்புகிறார்கள்.
நான் அது சும்மா சாதாரணமாக தான் சொன்னேன் என மனோஜ் கூறுகிறார் அதற்கு அண்ணாமலை என்ன இதெல்லாம் என மனோஜ்ஜை பார்த்து கேட்கிறார். நான் சாதாரணமாக தான் சொன்னேன் என கூறுகிறார் ஆனாலும் விஜயா அவனுக்கு பேச இப்ப வேற ஆள் இருக்கு அதனால தான் என்ன இப்படி திட்டுகிறான் என கூறுகிறார். உடனே முத்து நீ முட்டி போட்டு மன்னிப்பு கேட்டால் அம்மா மனசு மாறிடும் எனக் கூற உடனே முட்டி போடுகிறார்.
அம்மா சொல்ற வரைக்கும் நான் முட்டி போட்டுகிட்டு இருக்கிறேன் எனவும் கூறுகிறார் உடனே விஜய மனசு குளிருகிறது உடனே விஜயா மனோஜை பிடித்து தூக்குகிறார் மற்றொரு பக்கம் சிட்டி ஜெயில் இருந்து வந்து முத்துவை பழிவாங்க வேண்டும் என கூறிக் கொண்டிருக்கிறார். மேலும் பக்க வாக பிளான் போடுகிறார்கள் மற்றொரு பக்கம் விஜயா பார்வதி வீட்டில் இருக்க அப்பொழுது சிந்தாமணி வருகிறார் சிந்தாமணியை வெளுத்து வாங்குகிறார் விஜயா.
அவ பணத்த பிடுங்கி வெச்சுகிட்டா அவன் வந்து எடுக்க மாட்டானா முத்து நீ தேவை இல்லாம அவங்க கிட்ட வம்புக்கு போற அந்த முத்து பொல்லாதவன் நான் வீட்ல மாட்டிக்கிட்டேன் உன்னால தான் எனக்கு இந்த கெட்ட பேரு அவளை எதற்கு மீனாவை தள்ளிவிட்ட உன் சுயநலத்துக்காக நீ தள்ளி விடுவியா என சிந்தாமணியை திட்டுகிறார்.
இனிமே உனக்கு எதுவுமே சொல்லித் தர மாட்டேன் ஏன் கிளாசுக்கு வரவே கூடாது எனவும் திட்டி விடுகிறார். மற்றொரு பக்கம் கோவிலுக்கு மீனா செல்கிறார் அப்பொழுது சீதா அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் மற்றொரு காட்சியில் முத்துவுக்கு கோபம் வருவதாக கூறி ஒரு கயிறை கட்டுகிறார் மீனா அதற்கு கோபம் வரக்கூடாது என்றால் ஒரு கட்டிங் அடித்தால் சரியாகிவிடும் எனக்கொரு கூற முத்துவை மீனா அடிக்கிறார் அப்பொழுது விஜயா வெளியே இருந்து வருகிறார் அப்பொழுது தளவாணி தூக்கி போட அது விஜயா மீது பட்டுவிடுகிறது இதனால் விஜயா கோபத்துடன் பார்க்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.