அண்ணாமலை நீங்களே இப்படி பண்ணலாமா முத்து மேல எந்த தப்பும் கிடையாது.. மீனா நீங்களுமா இப்படி இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்க்கையே வேஸ்ட்..

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து குடித்தது போல் வீடியோ வைரலாகி வருகிறது இதனை வீட்டில் உள்ள அனைவரிடமும் மனோஜ் மற்றும் ரோகினி போட்டு காட்டுகிறார்கள் அதனால் அனைவரும் கோபமாக இருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் அண்ணாமலையை விஜயா கேள்வி கேட்கிறார் வார்த்தைக்கு வார்த்தை உங்க புள்ள உங்க புள்ளன்னு சொல்லுவீங்களே இது எப்படி இருக்கு என பேசுகிறார் அந்த சமயத்தில் மீனா வருகிறார் மீனா உள்ளே போக முயற்சி செய்யும்போது விஜயா கூப்பிடுகிறார்.

விஜயா அழைத்து எல்லாம் இவ குடுக்குற இடம்தான் அவன் குடிச்சிட்டு திரிகிறான் யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டா இப்படி குடிக்கிறான் எல்லாம் பேசுகிறார் இனிமே உன்னை எல்லாம் குடிகாரன் பொண்டாட்டின்னு தான் சொல்லுவாங்க என பேச அதற்கு மீனா நான் குடிகாரன் பொண்டாட்டி தான் ஆனா நீங்க அந்த குடிகாரன பெத்த அம்மா தானே நான் கல்யாணம் பண்ணி ஒரு வருஷம் தான் ஆகுது என்னால திருத்த முடியல தான் ஆனால் அதுக்கு முன்னாடி நீங்க தான வளர்த்தீங்க ஏன் உங்களால திருத்த முடியலையா என பேசுகிறாள்.

அதற்கு சுருதி கரெக்டு தான் நீங்க தானே திருத்தி இருக்கணும் இப்ப வந்து மீனா மேல பழியை போட்டா எப்படி என கேட்கிறார் இப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஸ்ருதியின் அம்மா போன் பண்ணி பேசுகிறார்கள் முத்துவை அசிங்கமாக பேச உடனே சுருதி ஃபோனை பிடுங்கி நீ என்ன பைத்தியமா அம்மா இங்க எவ்வளவு பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு ஆன்ட்டி குடிச்ச மாதிரி ஆன்ட்டியை பத்தி பேசிட்டு இருக்கீங்க என பேசுகிறார்.

அப்பொழுது முத்து வீட்டுக்குள் வர முத்து அனைவரிடமும் பேச்சு கொடுக்க நீ குடிச்சிட்டு ரகளை பண்ணது வீடியோவுல வந்துடுச்சு என பேசுகிறார்கள் அதற்கு முத்து நான் குடிக்கவில்லை என கூறுகிறார் ஆனாலும் மனோஜ் முத்துவை சீண்டி பார்க்கிறார் முத்து மனோஜை அடிப்பதற்கு முயற்சி செய்யும்போது அண்ணாமலை தடுத்து நிறுத்தி வீட்ல வந்து ரவுடித்தனமா பண்ற என அடிப்பதற்கு கையை ஓங்குகிறார்.

இதனால் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள் அது மட்டும் இல்லாமல் முத்து சத்தியமா நான் குடிக்கலப்பா என்னை நம்புங்க நீங்க நம்புலனா வேற யாரு நம்புவா என கெஞ்சுகிறார் ஆனாலும் அண்ணாமலை இதுக்கு மேல உன்ன நான் எப்படி நம்புறது நீ பண்ணி வச்ச காரியம் அப்படி என பேசுகிறார் உடனே மீனா விடம் போய் கெஞ்சுகிறார் நான் சத்தியமா குடிக்கல நீயாவது நம்பு என சொல்ல எதை நம்ப சொல்றீங்க உங்களுக்கு குடிக்கவே தெரியாதுன்னு சொல்லி நம்ப சொல்றீங்களா என மூஞ்சில் அடித்தது போல் பேசுகிறார்.

ரவியிடம் சென்று சத்தியமாக குடிக்கல நீயாவது நம்புடா என பேச நீ குடிக்கிறது உன்னோட பர்சனல் விஷயம் ஆனா பப்ளிக் பிளேஸ்ல குடிக்க கூடாது இனி பார்த்து நடந்துகோ என சொல்லிவிட்டு செல்கிறார் உடனே ரோகிணி வந்து மனோஜ் விஷயத்துல எத்தனை டைம் தலையிட்டு பிரச்சனை பண்ணுனீங்க இன்னொரு டைம் எங்க விஷயத்துல தலையிட்டடா அவ்வளவுதான் என வாரன்  பண்ணிவிட்டு செல்கிறார்.

மீனாவிடம் சென்று தனியாக பேசி பார்க்கிறார் முத்து ஆனால் மீனா கோபத்துடன் முத்துவிடம் பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.