போலீஸ் ஸ்டேஷனில் சிட்டியை அறைந்த முத்து.. ரோகினிக்கு செருப்படி பதில் கொடுத்த மீனா..

siragadikka aasai may 10
siragadikka aasai may 10

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா மற்றும் முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள் அப்பொழுது தயக்கத்துடன் இருந்த முத்துவை உள்ளே அழைத்து செல்கிறார்கள் உடனே போலீஸ் இருந்தாலும் உன் பொண்டாட்டி நீ சொன்ன மாதிரியே ரொம்ப குடுத்து வச்சவன் தான் பா என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் மீனாவையும் இருவரையும் சேரில் உட்கார சொல்கிறார்கள் டீ மற்றும் வடையை வாங்கி போலீஸ் கொடுக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் நாங்களே நீங்க குடித்திருப்பீங்கன்னு தான் நினைச்சேன் ஆனா நீங்க குடிக்கலைன்னு நிரூபிச்சம் மறுபடியும் தான் எங்களுக்கே நாங்க செஞ்சு தப்பு தெரியுது என போலீஸ் மன்னிப்பு கேட்கிறார்கள் அப்பொழுது சிட்டியை போலீசை அழைத்து வர சொல்கிறார்கள் சிட்டி வந்தவுடன் இவன் மேல கேஸ் போடணுமா இல்ல நஷ்ட ஈடு வாங்கி தரணுமா என கேட்க உடனே இவன் மேல கேஸ் போட்டு உள்ள தள்ளுங்க அப்பதான் இந்த மாதிரி பொய்யா வீடியோ எடுத்து அனுப்புற சிலபேருக்கு பாடமாக அமையும் என முத்து கூறுகிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் வெளியே செல்வதற்கு முன்பு இப்ப போலீஸ் ஸ்டேஷனுக்கு மட்டும் இல்லன்னா இந்நேரம் உன் மூஞ்சி முகரை கிழிச்சி இருக்கலாம் என பேசுகிறார் மீனா உடனே போலீஸ் ஸ்டேஷன் என்று கூட பார்க்காமல் முத்து சிட்டியை அடி அடி என்று அடிக்கிறார். உடனே போலீஸ் தடுத்து போங்க என கூறுகிறார்கள் மற்றொரு பக்கம் அண்ணாமலை உன்னுடைய வீட்டில் உள்ளவர்களிடம் அனைவரையும் அழைத்து வீடியோவை டிவியில் போடு என மனோ இடம் கூறுகிறார்.

அண்ணாமலை கண் கலங்குகிறார் அது மட்டும் இல்லாமல் விஜயாவிடம் உன் பேச்சை கேட்டுகிட்டு நானும் என் புள்ளையை தப்பா நினைச்சுட்டேன் என கூறுகிறார் அதேபோல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சத்தியா வந்துள்ளதால் மீனா சத்யாவை திட்டுகிறார் அவன் பின்னாடியே போனா ஒரு காலத்துல நீயும் ஜெயிலில் தான் இருப்பாய் என பேசுகிறார். சத்யா சிட்டியை பார்க்க உள்ளே செல்கிறார்  அப்பொழுது சிட்டி நான் வேண்டுமென்றே செய்யவில்லை உன்கிட்ட காட்ட தான் வீடியோ எடுத்தேன்  ஆனால் அதை யாரோ நெட்டில் அப்லோட் செய்து விட்டார்கள் என சொல்லி தப்பிக்கிறார்.

அண்ணாமலை விஜயாவிடம் ஆரத்தி  எடுத்துக் கொண்டு வா என்று கூற முடியாது எனக் கூறுகிறார் நான் உன்கிட்ட கேக்கல நீ எடுத்துகிட்டு வா என பேசுகிறார் அந்த சமயத்தில் முத்து மீனா ரவி மூன்று பேரும் வருகிறார்கள் உள்ளே வருவதற்கு முன்பு அண்ணாமலை உள்ளே வரக்கூடாது வெளியே நில்லுங்கள் எனக் கூறுகிறார் உடனே ரவி அண்ணாமலை இடம் பேசி பார்க்க ஆரத்தி எடுத்து வந்து ரோகினி ஸ்ருதி விஜயா மூன்று பேரையும் எடுக்க சொல்கிறார் அதன் பிறகு தான் மீனா மற்றும் முத்து உள்ளே வருகிறார்கள் முத்து அண்ணாமலையை பார்த்து பேச இருவரும் கட்டி பிடித்து அழுகிறார்கள்.

அண்ணாமலை முத்துவிடம் மன்னிப்பு கேட்கிறார் அதனால் முத்து கண்கலங்கி நிற்கிறார் இப்படி அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் அப்பொழுது ரோகினி இடம் மீனா சென்று குடிக்கிறவங்களை எப்படி திருத்தணும்னு எனக்கு தெரியாது. ஆனால் குடிக்காத என் புருஷனை எப்படி காப்பாத்தணும்னு எனக்கு தெரியும் என முன்ச்சில் செருப்பால் அடித்தது போல் பதில் கூறுகிறார் இதனால் ரோகிணி முகம் வாடுகிறது

இத்துடன் எபிசோட் முடிகிறது.