சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனதையும் அவருக்கு ஒரு மகன் இருக்கிறான் அவன் பெயர் க்ரிஷ் என்பதையும் தெரிந்து கொள்கிறார் உடனே இதனை வீட்டில் சொல்லப் போகிறேன் என மீனா சொல்ல அதற்கு ரோகிணி வேண்டாம் என என் வாழ்க்கையே போய்விடும் நான் தேடிக்கொண்ட வாழ்க்கை எனக்கு கூறுகிறார்.
ஆனாலும் மீனா உன் புருஷனுக்கும் நீ உண்மையா இல்லை உன் பையனுக்கும் உண்மையாய் இல்லை கண்டிப்பா இதை சொல்லியாக வேண்டும் என கூறுகிறார். மற்றொரு பக்கம் தண்ணீர் எடுக்க போன மீனாவை காணும் என தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் மீனா அங்கே வர ரோகிணி எங்கே என விஜய் கேட்க ரோகினியை முறைக்கிறார் அப்பொழுது ரோகிணி ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். ஆனால் மீனா வீட்டில் உள்ளவர்களிடம் உண்மையை கூறவில்லை அதற்கு காரணம் உண்மையை சொன்னால் நானும் என் பையனும் தற்கொலை செய்து கொள்வோம் என மீனாவை மிரட்டி உள்ளார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கோயிலில் பூஜை நடைபெறுகிறது அப்பொழுது மீனா ஜாடைமடையாக ரோகிணியை குத்தி காண்பிக்கிறார். ஆனாலும் அவர் அசர்வது போல் தெரியவில்லை ரோகிணி மேட்டரை வீட்டில் சொல்லாததால் ரோகிணிக்கு ஒரே சந்தோஷம்.
உடனே கோவிலில் தரிசனம் முடித்து விட்டு செல்லும் பொழுது வழக்கம் போல் பைத்தியக்காரன். அனைவரையும் முறைக்கிறார் இதுவரை தெரியாத ரகசியம் ஒருவருக்கு தெரிந்து விட்டது என கூறுகிறார் ஆனால் யாருக்குமே ஒண்ணுமே புரியவில்லை ஆனால் மீனாவுக்கு மட்டும் தெரிகிறது.
உடனே அண்ணாமலை இந்த பழங்களில் எது வேணாலும் எடுத்துக் கொள் என பயித்தியகாரனிடம் கூற ஆப்பிளை எடுத்து அதனை மனோஜிடம் கொடுக்கிறார் நீதான் விரைவில் கையேந்த போகிறாய் அதனால் வைத்துக்கொள் என்பது போல் கூறுகிறார்.
அனைவரும் வீட்டிற்கு செல்ல அப்பொழுது வரும் வழியில் க்ரிஷ் மற்றும் அவரின் பாட்டியை பார்க்கிறார் உடனே அவர்களை வீட்டிற்கு அழைக்கிறார் உங்க வீட்டுக்கா என அவர் அதிர்ச்சி அடைய இத்துடன் எபிசோட் முடிகிறது.

