முத்துவை பார்த்து பீதியில் உறைந்த ரோகிணி.. மனோஜ்ஜெய் வசியம் செய்ய பலே பிளான் போடும் பெண்…

siragadikka aasai july21
siragadikka aasai july21

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷை முத்து வீட்டிற்கு அழைத்து வருகிறார் ஏனென்றால் கிரிஷின் பாட்டி அடிபட்டு பத்து நாள் ஹாஸ்பிடல் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என கூறி விடுகிறார்கள். இதனால் முத்து கிரிஷை அழைத்து வர அதனை பார்த்த ரோகினி அதிர்ச்சி அடைகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடு ஒரு மேக்கப் ஆர்டருக்காக கொடைக்கானல் போக வேண்டிய நிலைமை ஏற்படுகிறது இதனால் ரோகிணி எப்படியாவது மனோஜ் அழைத்துச் செல்ல வேண்டும் என முயற்சி செய்கிறார் அதற்கு மனோஜிடம் சொல்ல மனோஜ் அம்மாவிடம் எப்படி கேட்க முடியும் அம்மாதான் பேச விட மாட்டாங்களே எனக்கு கூறுகிறார்.

நீ உன் அம்மாவை கட்டிக்கிட்டு என கூறிவிட்டு செல்கிறார் அப்பொழுது அந்த கடையில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் எங்க ஊரில் இப்படி இருக்கும் ஒருவருக்கு லேகியம் தந்து வசியம் செய்து விடுவார்கள் நீங்க வேணா அதை ட்ரை பண்ணுங்க என கூறுகிறார் அந்த லேகியத்தை பாலில் கலந்து கொடுக்க வேண்டும் என கூறுகிறார்.

இதனால் ரோகிணி லேகியத்தை எடுத்து சென்று பாலில் கலக்க முயற்சி செய்யும் பொழுது பால் கெட்டுவிடுகிறது. அதனால் பால் கடையில் போய் வாங்கலாம் மேடம் முயற்சி செய்கிறார் அப்பொழுது லேகியத்தை கொடுத்தது போல் கனவு காண மனோஜ் தான் என்ன சொன்னாலும் செய்வது போல் கனவு காண்கிறார்.

பால் வாங்க செல்லும் பொழுது முத்து ரோகினையின் பையன் கிரிஷை அழைத்து வருகிறார். அப்பொழுது அவரைப் பார்த்ததும் ரோகிணி கடும் அதிர்ச்சி அடைகிறார். இந்த பையன் என ரோகிணி கேட்க வர ஆமா இவன் தான் க்ரிஷ் இவனை தான் உனக்கு தெரியுமே எனக் கூறுகிறார்.

உடனே வீட்டில் உள்ள அனைவரையும் முத்துக் கூப்பிட ரோகிணி அதிர்ச்சி அடைந்து எதற்கு என கேட்கிறார் இதனால் மரண பயம் அடைகிறார். பொதுவாக முத்து வீட்டில் உள்ளவர்களை கூப்பிட்டால் ஏதோ ஒரு உண்மையை சொல்லப் போகிறார் என அர்த்தம் ஆனால் இந்த முறை அது என்னவாக இருக்கும் ஒருவேளை நம்ம மேட்டர் தெரிந்து விட்டதோ என ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

உடனே வீட்டில் உள்ள அனைவரும் வந்தவுடன் கிரிஷை பார்த்ததும் அனைவரும் சந்தோஷம் அடைகிறார்கள் ஆனால் வழக்கம் போல் விஜயா அதிர்ச்சி அடைகிறார். அதேபோல் ரோகினி மனோஜிடம் கூறி அந்தப் பையன் வீட்டில் இருக்கட்டும் என கூறுகிறார் இதனால் முத்து யார் யார் இந்த பையன் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் கை தூக்குங்கள் எனக் கூற விஜயாவை  தவிர அனைவரும் கை தூக்குகிறார்கள்.

அதேபோல் அண்ணாமலை விஜயாவிடம் அந்தப் பையன் இருந்துட்டு போறான் அவங்க பாட்டிக்கு தான் அடிபட்டு இருக்கே என கூறுகிறார் அவங்க பாட்டிக்கு அடிபட்டதை  கேட்டு அதிர்ச்சி அடைகிறார் ரோகிணி. உடனே ஹாஸ்பிடலுக்கு சென்று தன்னுடைய அம்மாவை பார்த்து எதற்காக கிரிஷை அங்கு அனுப்பி வைத்தாய் என கேட்கிறார்.

அதற்கு ரோகிணியின் அம்மா அதிர்ச்சி அடைந்து இப்ப கூட உன் வாழ்க்கையை பத்தி தான் யோசிக்கிற, என்ன கொஞ்சம் கூட யோசிக்கவில்லையா என பேசுகிறார் அவன் இருக்கிற ஒவ்வொரு நேரமும் எனக்கு பயமாய் இருக்கிறது என கூறுகிறார் ரோகினி  இத்துடன் எபிசோட் முடிகிறது.