அட நம்ம சிறகடிக்க ஆசை மீனாவா இது..! இளம் வயதில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..

விஜய் தொலைக்காட்சியில் நடித்து வரும் கோமதி பிரியா இளம் வயது புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எத்தனையோ சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அதிலும் குறிப்பாக சிறகடிக்காக சீரியல் தான் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் டிஆர்பி லிஸ்டிலும் சமீப காலமாக முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் அடிமைப்பெண் போல் மீனா நடித்து வருகிறார் அவரின் இயற்பெயர் கோமதி பிரியா.

இந்த சீரியல் முழுக்க முழுக்க கதாநாயகன் மற்றும் கதாநாயகியை மையமாக வைத்து நகர்ந்து கொண்டிருக்கிறது முத்து மீனா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது சிறகடிக்க ஆசை சீரியல் தான் அந்த அளவு இவர்கள் மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்கள்.

மேலும் அண்மையில் நடந்த விஜய் டெலிவிஷன் விழாவில் சிறந்த நாயகன் சிறந்த நாயை காண விருதை முத்து மற்றும் மீனா தட்டி சென்றார்கள். இந்த ஜோடியை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.

மீனா என்கின்ற கோமதி பிரியா விருது வாங்கிய புகைப்படம் வைரலாகி வருகிறது அதே போல் அவரின் பழைய புகைப்படம் வைரலாகி வருகிறது இதற்கு முன்பு இவர் விஜய் தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்டார் அந்த புகைப்படத்தையும் தற்போது உள்ள புகைப்படத்தையும் இணைத்து ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

பழைய புகைப்படத்தில் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பதற்கு காலேஜ் பெண் போல் இருக்கிறார் ஆனால் தற்பொழுது உள்ள புகைப்படத்திற்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது இதனை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.