ஷோரூம் சென்ற ரோகிணி மனோஜ் குட்டு வெளிப்படுமா.? போன் செய்த வசீகரன் ரோகிணியின் ரகசியம் வெளியாகும்மா – சிறகடிக்க ஆசை

Siragadikka Aasai September 20
Siragadikka Aasai September 20

Siragadikka Aasai September 20 : இன்றைய எபிசோடில் மனோஜ் கொடுத்த ஒரு லட்சம் பணத்தை எண்ணி பார்த்துவிட்டு முத்து 4,000 குறையிது என்று சொல்ல, கூடிய சீக்கிரம் அந்த பணத்தை நான் கொடுத்துடுறேன் என மனோஜ் சொல்கிறார் ஆனால் முத்து அதை நம்பாமல் கொஞ்ச நாள்ல நீ பணத்தை கொடுத்துவிடுகிறேன் என்று வாக்குமூலம் குடு நான் ரெக்கார்ட் பண்ணிக்கிறேன் என்ன கேட்கிறார்.

இதை பார்த்து கோபப்பட்ட ரோகினி நிறுத்துங்க, மனோஜ ரொம்ப அசிங்கப்படுத்துறீங்க உங்களுக்கு என்ன இப்ப பணம் தானே வேணும் என்று ரோகினி ரூமுக்கு போய் 4000 பணத்தை எடுத்து வந்து முத்துவிடம் கொடுக்கிறார்.. முத்து அதனை அப்பாவிடம் கொடுத்து நீ உன் அக்கவுண்ட்ல போட்டு வச்சுக்கோ என சொல்ல அவர் அம்மாவிடம் கொடு..

அம்மா கல்யாணத்துக்கு வாங்குன கடன் கொடுக்கணுன்னு சொன்னாங்க என அவர் சொல்ல முத்து பிறகு அம்மாவிடம் கொடுத்து உள்ளார்.. அடுத்து ரூமில் முத்து மீனாவிடம் எங்க அம்மா ஈஸியாலாம் யாருகிட்டயும் பணத்தை கொடுக்காது மனோஜ் தான் தெரியாம எடுத்து இருப்பான், இதுல ஏதோ மறைஞ்சிருக்கு என்று சொல்ல ரோகிணி இதை வெளியில் இருந்து காதல் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

அடுத்து ரோகிணி இடம் வேலைக்கு போறேன் என்று சொல்லிவிட்டு பார்க்குக்கு போய் தூங்கிக் கொண்டிருக்கிறார். பிறகு தூங்கி எழுந்து சாப்பிடுகிறார். அப்போது ரோகிணி மனோஜ்க்கு போன் பண்ணி எங்க இருக்க என்று கேட்க நான் ஷோரூம் ல தான் இருக்கேன் என்று சொல்வதும்..

ரோகிணி நான் ஷோரூமுக்கு வெளியே தான் இருக்கேன், உன் கேபின் எங்கன்னு சொல்லு உள்ளவறேன்னு சொல்ல மனோஜ் இல்ல நான் ஷோரூம் ல இல்ல கஸ்டமர கூட்டிட்டு கார் எடுத்துட்டு வெளியே போய் இருக்கேன் வர லேட் ஆகும் நீ வெயிட் பண்ணாத என மனோஜ் ரோகினியிடம் சொல்ல ரோகினி திரும்ப பார்லருக்கு சென்று விட்டார்.

பிறகு விஜயாவிற்கு மலேசியாவில் இருந்து போன் வருகிறது ஒருவர் நான் மலேசியாவில் இருந்து பேசுறேன் என்று சொல்ல ரோகினி ஓட அப்பாவா சொல்லுங்க சம்மந்தி எப்படி இருக்கீங்க ரோகிணி உங்களை பற்றி அப்பப்ப பேசிகிட்டு இருப்பா என்று சந்தோஷத்தில் விஜயா பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு அவர் நா ரோகினி ஓட அப்பா பேசல தாய் மாமா பேசுறேன்.

Siragadikka Aasai
Siragadikka Aasai

ரோகிணி அவங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல அவரால பேச முடியாது ரோஹினி வந்தா மலேசியாவில் இருந்து வசீகரன் பேசினதா சொல்லுங்க ஷாக் ஆயிடுவாங்க என்று சொல்லிவிட்டு அவர் போனை வைக்கிறார்.. பிறகு விஜயா ரோகினிக்கு போன் பண்ணி மலேசியாவில் இருந்து உங்க தாய் மாமா வசீகரன் பேசுனாங்க என்று சொல்ல ரோகிணி ஷாக் ஆகிறார் இதோட எபிசோட் முடிந்துள்ளது