ரோகினிக்கு விஜயா வைக்கப் போகும் செக்.. மீண்டும் உதவுவாரா மீனா…கேள்வி குறியாகும் ரவியின் வாழ்க்கை.?

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷ் ரோகிணி மற்றும் மனோஜ் கூட படுத்த வேண்டும் என்பது மீனாவின் அடுத்த கட்டளை ரோகிணிக்கு ஆனால் அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது இரவு நேரத்தில் கிரிசை எழுப்பி போய் நீ ரோகினி பக்கத்தில் படுத்துக்கொள் எனக் கூறுகிறார். அப்பொழுது கிறிஸ்து எழுந்திருக்கிறார் ஆனால் அந்த சமயத்தில் விஜயா வருகிறார் உடனே க்ரிஷ் நாற்காலியில் அமர்ந்து கொண்டு தூங்குவது போல் நடிக்க அதை நீ பார்த்து விஜயா குட்டிச்சாத்தான் என சொல்லிவிட்டு பயந்து ரூமுக்குள் ஓடுகிறார்.

பிறகு க்ரிஷ் ரோகிணி படுத்திருக்கும் இடத்திற்கு சென்று படுத்துக் கொள்கிறான் அதிகாலையில் மனோஜ் உடன் க்ரிஷ் படுத்திருப்பதை பார்த்து அலறி அடித்து ஓடுகிறார் மனோஜ். உடனே விஜயாவிடம் மனோஜ் கூற இது என்ன கூத்தா இருக்கிறது என சண்டை போடுகிறார்.

அப்பொழுது அண்ணாமலை வர என்ன ஆச்சு எனக்கு கேட்க அதற்கு முத்து நடந்ததை கூறுகிறார் அந்த சின்ன பையன் இவங்க மூணு பேரும் பாசத்தை காட்டலையே என இவர்களிடம் பாசத்தை எதிர்பார்க்கிறான் இதைக்கூட புரிந்து கொள்ள முடியவில்லை என பஞ்சாயத்தை முடித்து வைக்கிறார்.
ஆனால் விஜயா இன்னும் கோபம் அதிகமாகி ரோகிணியை அழைத்து நீ பார்வதி வீட்டுக்கு வா உன்னிடம் தனியா பேசணும் என அழைக்கிறார் ஒருவேளை அடுத்ததாக கிறிஸ்டை அனுப்ப பழைய திட்டம் தீட்ட போகிறாரா இதனால் ரோகிணி எப்படி சமாளிக்க போகிறார். என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மற்றொரு பக்கம் ரவி மற்றும் ரவியின் முதலாளி இருவரும் இணைந்து எடுக்கும் புகைப்படத்தை சுருதிக்கு அனுப்பி வைக்கிறார் இதனால் ஸ்ருதி கோபப்படுகிறார் இதுபோல் அனுப்புவதால் நான் கோபப்படுவேன் என்று வேண்டுமென்றே செய்கிறார் ரவி புரிஞ்சுக்கோ நம்ப ரெண்டு பேருக்குள்ள பர்சனலா ஏதாவது சண்டை வந்துடும் கொஞ்சம் நீயே பார்த்து நடந்துக்கோ. உடனே ரவி நீத்துவை திட்டுகிறார்.

பார்வதி வீட்டில் ரோகிணி மற்றும் சிந்தாமணி விஜயா மூவரும் மீட்டிங் போடுகிறார்கள் அப்பொழுது மீண்டும் கடத்துவதாக சிந்தாமணி கூற அய்யய்யோ வேண்டாம் என் புருஷன் என்ன ஜெயிலில் புடிச்சு கொடுத்து விடுவான் என கூறுகிறார் உடனடியாக விஜயா முடிவெடுத்து கிரிஷை உங்கள் ரூமில் விடக்கூடாது கெட்டியாக கதவை மூடி கொள்ளுங்கள் என ரோகினிக்கு செக் வைக்கிறார் இதனால் ரோகிணி பிதுங்கி நிற்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது