சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று எபிசோடில் கிரிஷை காப்பாற்றி முத்து வீட்டுக்கு கூட்டி வருகிறார் உடனே கிரிஷை பார்த்தவுடன் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். அதேபோல் மனோஜ்க்கு எப்படி அவன் கால் பண்ணினான் என அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என அண்ணாமலை கூற முத்து இடம் கூறி விசாரிக்க சொல்கிறார்.
மற்றொரு காட்சிகள் அருணுக்கு ப்ரமோஷன் வந்துள்ளதாக வீட்டில் உள்ளவர்கள் சந்தோஷப்படுகிறார்கள் உடனே அருணை புகழ்ந்து பேசுகிறார்கள் எதற்காக பிரமோஷன் என கேட்க ஒரு குழந்தையை கடத்த வந்தவர்களை தனி ஆளாக மடக்கி பிடித்தேன் என கூறுகிறார். அப்பொழுது சீதாவின் தம்பி வருகிறார் அவரிடமும் கூறுகிறார் உடனே அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது போலீஸ் அதிகாரி வந்து அருணுக்கு மாலை போட்டு மகிழ்வித்து செல்கிறார்.
உடனே சீதாவின் தம்பி மீனாவுக்கு போன் செய்து அருண் மாமாவுக்கு ப்ரோமோஷன் கிடைத்துள்ளதாக கூற அதற்கு சந்தோஷம் என கூறுகிறார் உடனே முத்துவும் போனை வாங்கி பேசுகிறார். என்ன விஷயம் என கேட்க குழந்தையை காப்பாற்றியதற்காக அருண் மாமாவுக்கு பிரமோஷன் கிடைத்துள்ளது எனக் கூறுகிறார் இதனால் முத்துவும் சந்தோஷம் என நினைக்கிறார்.
இதற்கெல்லாம் காரணம் முத்து என்பது முத்துவுக்கு மட்டுமே தெரியும் ஆனால் முத்து மீனா மற்றும் சீதாவின் தம்பி என அனைவரிடமும் மறைக்கிறார் ஒருநாள் கண்டிப்பாக தெரியவரும் எனவும் கூறுகிறார். மற்றொரு பக்கம் விஜயா பார்வதியை திட்டுகிறார் அதனால் பார்வதி அழுது கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் மீனா விடம் பார்வதி சொல்ல அத்தைக்கு இப்படி தான் பேச தெரியும் என பேசுகிறார்.
உடனே பார்வதியின் மகன் வந்து கதை எழுதும் ஆசிரியரை பார்த்து அசிங்கமாக பேசுகிறார் இதனால் பார்வதி அழுது கொண்டிருக்கிறார் உடனே மீனா முத்துவுக்கு போன் செய்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.