இப்பதான் நீ என் பூ கட்டுற மருமக முதன்முறையாக மீனாவை புகழ்ந்து தள்ளும் விஜயா.! சீத்தாவை ஏத்தி விட்டு வேடிக்கை பார்க்கும் அருண்..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம் எதற்காக கிரிஷை தத்தெடுக்க கூடாது என்பதை அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது எங்கு நாம் மாட்டிக் கொள்வோமா என எண்ணி ரோகிணி ஒருவேளை அவர்களுக்கு வேண்டாம் என்று தோன்றியிருக்கும் இதை ஏன் பெருசு படுத்துறீங்க என கூறுகிறார் ரோகிணி.

பிறகு மீனா யோசித்து நமக்கு ஒரு குழந்தை பிறந்துட்டா க்ரிஷ் மேல அதிக பாசத்தை வைப்போம்னு எனக்கு தெரியல அதனால் எனக்கு சந்தேகமாய் இருக்கிறது இதனால் தான் நான் கிரிசை தத்தெடுக்க வேண்டாம் என கூறினேன் என கூறுகிறார். இதனைப் புரிந்து கொண்ட அண்ணாமலை மீனா சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என கூறுகிறார்.

உடனே விஜயா கைத்தட்டி இப்பதான் நீ என் பூ கற்ற மருமகன் என்று நிரூபிச்சிட்ட யாரு வீட்டுக்கு யாரு வாரிசு ஏன் புள்ளைங்க வயதிலிருந்து வந்தாதான் அது வாரிசு என கூறுகிறார் உடனே ஸ்ருதி கைதட்டுகிறார் முதன் முறையாக மீனாவை அத்தை பாராட்டி உள்ளார் என பேசுகிறார். அடுத்த காட்சியில் எப்படியும் சீத்தாவிடம் அருண் பொய் சொல்லி ஏத்தி விட்டு இருப்பான் அது என்னன்னு பார்க்க வேண்டும் என முத்து மீனாவிடம் கூறுகிறார்.

உடனே மீனா சீத்தாவிற்கு கால் செய்கிறார் சீத்தா கட் பண்ணி விடுகிறார் ஆனால் அங்கு அருண் தன் மீது தப்பே இல்லாதது போல் முத்து தான் அடித்தது போல் சீதாவிடம் கூறிவிடுகிறார் இதனால் சீத்தா கோபமாக இருக்கிறார் . உடனே அருண் மற்றும் அருண் அம்மா அந்த முத்துவிடம் இனி நீ பேசக்கூடாது என திட்டவட்டமாக கூறி விடுகிறார்.

மற்றொரு காட்சியில் மீனா முத்து அனைவரும் சீத்தாவின் வீட்டிற்கு வந்துள்ளார்கள் சீத்தாவும் அங்கு வருகிறார் அப்பொழுது சீத்தாவிடம் நடந்தது என்ன என பேச நீ எதுக்கெடுத்தாலும் உன் புருஷனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ அதே மாதிரி தான் நானும் என் புருஷனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன் என சொல்ல வருவதை கேட்காமல் சீத்தா பேசுகிறார்.

மேலும் அவர் ஒரு போலீஸ் அவர் மேலயே இப்படி பப்ளிக்கா அடிக்கிறீர்களே நான் எப்படி கேட்காமல் இருக்க முடியும் என பேசுகிறார் வீட்டில் அனைவரும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சீத்தா கிளம்புகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.