விஜய் டெலிவிஷன் விருதில்.. சிறகடிக்க ஆசை சீரியல் வென்ற விருதுகள்.? லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வரும் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அதிலும் சீரியல் என்றாலே சன் தொலைக்காட்சி தான் முதலிடத்தில் இருக்கும் ஆனால் சமீப காலமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் தான் முதலிடத்தில் இருந்து வருகிறது.

அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் சீரியலை தாண்டி கொண்டாட்டம் குத்தாட்டம் என பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். சீரியல் டி ஆர் பி யில் முன்னிலையில் இருக்கும் அப்படிதான் சமீப காலமாக சிறகடிக்க ஆசை சீரியல் முதலிடத்தில் இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பற்றி தகவல் வெளியாகி வருகிறது அதாவது ஒன்பதாவது விஜய் டெலிவிஷன் விருதுதான் அது. இந்த விஜய் டெலிவிஷன் விருது நடந்து முடிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் நடிகைகள் எந்த விருதை தட்டிச் சென்றுள்ளார்கள் என்பதை இங்கே காணலாம்.

சிறந்த நடிகர் வெற்றி வசந்த், சிறந்த நடிகை கோமதி பிரியா, சிறந்த மாமியார் அணிலா ஸ்ரீகுமார், சிறந்த மாமனார் சுந்தர்ராஜன், சிறந்த பாட்டி ரேவதி, சிறந்த சீரியல் சிறகடிக்க ஆசை, சப்போர்ட்டிங் ஆக்டர்ஸ் அண்ட் ஆக்டர்ஸ் ஸ்ரீதேவா சல்மா, என பல விருதுகளை சிறகடிக்க ஆசை சீரியல் வாங்கியுள்ளது.