நீ ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கிட்டியா குழந்தை பெத்துக்கிட்டியா..? ரோகினியை பார்த்து மனோஜ் கேட்ட கேள்வி..?

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கேசரி செய்து அனைவருக்கும் கொடுக்கிறார் அப்பொழுது எதற்காக என்று கேட்க அண்ணாமலை சீதா பாஸ் பண்ணியதற்காக இருக்கும் என கூறுகிறார். அவ பாஸ் பண்ணியதற்கு என் வீட்டு சக்கரையை தான் வீணாக்குவிர்களா என விஜயா கூறுகிறார்.

உடனே அதுக்காக மட்டும் கிடையாது இது ரோகிணிக்காகவும் தான் எனக் கூற எனக்காகவா என்ன சொல்கிறாய் என பேசுகிறார் ஆமா ரோகிணி நீங்க ஹாஸ்பிடல் போனீங்களா கற்பமாக இருகிங்களே என கூற அது எப்படி உங்களுக்கு தெரியும் என பேசுகிறார். சீதா தான் சொன்னாள் என பேசுகிறார் அப்போது ஹாஸ்பிடலுக்கு வேற எதுக்கு போவாங்க என சுருதியம் கேள்வி கேட்கிறார்.

அதற்கு விஜயா என்கிட்ட கூட சொல்லாம இவள் கிட்ட சொன்னியா என பேசுகிறார். ஆனால் ரோகிணி கொஞ்சம் நிறுத்துறீங்களா மீனா தேவையில்லாம என் விஷயத்தில் மூக்க நுழைக்காதீங்க உங்களுக்கு இருக்கிற லிமிட் அவ்வளவுதான் என பேசிவிட்டு நான் ஜென்ரல் செக்கப்பிற்காக சென்றேன் என கூறுகிறார்.

மீனாவை திட்டி விட்டு உள்ளே செல்கிறார் ரோகினி பிறகு மனோஜம் செல்கிறார் இன்னைக்கு மீனா செய்ததற்கு சரியான பதில் கொடுத்தாச்சு என மனோஜ் பேசிக் கொண்டிருக்கிறார் எனக்கு மீனா மீது கோபம் கிடையாது மீனா சொன்னது நடந்தால் எனக்கு சந்தோசம் தான் என பேசுகிறார் ரோகிணி.

அது மட்டும் இல்லாமல் ரோகிணி மனோஜிடம் ஆசையாக சென்று நாம ரெண்டு பேரும் சின்னதா ஒரு செக்கப் பண்ணிக் கொள்ளலாம் என பேசுகிறார்கள் அதற்கு மனோ கோபப்பட்டு ரோகிணி நான் செக்கப் வர முடியாது எனக்கு கான்ஃபிடன்ஸ் இருக்கு எனக்கு இந்த பிரச்சனையும் கிடையாது எனக்கு கூறுகிறார். இதனால் கோபப்பட்டார் ரோகிணி நீ எப்படி அவ்வளவு ஸ்ட்ராங்கா சொல்ற நீயும் ஜீவாவும் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்தீர்களே அப்பொழுது அவர் கர்ப்பமானாளா என கேள்வி கேட்கிறார்.

அதற்கு மனோஜ் கோபப்பட்டு ரோகினியை பார்த்து நீ கல்யாணத்துக்கு முன்னாடி கர்ப்பமாக இருக்கிறாயா? யாரு கண்டா கல்யாணம் பண்ணி இருக்கலாம் கர்ப்பமாய் இருக்கலாம் என பேச ரோகினிக்கு கோவம் வருகிறது மனோஜ் சட்டையை  பிடித்து ஆக்ரோசத்துடன் கோபப்படுகிறார்.

பிறகு மனோஜ் கோபமாக நிற்க ரோகினி கோபமாக பேசிவிட்டு உன்ன நான் என்னவோ நினைச்சேன் நீ இப்படி பேசுவன்னு கொஞ்சம் கூட நினைக்கல என கோபமாக பேசிவிட்டு ரோகினி உட்காருகிறார் மனோஜ் சமாதானப்படுத்திவிட்டு நான் தனியாக இருக்க வேண்டும் என வெளியே செல்கிறார். அப்பொழுது விஜயா வந்து மனோஜிடம் பேசுகிறார் உள்ளே நடந்ததை ஒன்று விடாமல் மனோஜ் தன்னுடைய அம்மாவின் கூறுகிறார் இதனால் விஜயா கோபப்படுகிறார்.

உடனே உள்ளே சென்ற விஜயா ரோகிணியை பார்த்து நீ எப்படி என் பையனை பார்த்து அப்படி கேட்கலாம் நான் நீ பார்த்து வச்ச மருமக அதனாலதான் உன் மேல தனி பாசம் இருக்கு ஆனா என் பையனை எப்படி பார்த்துக்கிறியோ அந்த அளவு தான் உனக்கு பாசம் உனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கும் அவன் எதையுமே மறைக்கவில்லையே ரிலேஷன்ஷிப்பில் இருந்ததை உன்கிட்ட தான் சொல்லிட்டானே அப்புறம் எதுக்கு இப்படி ஒரு கொஸ்டின் நான் அவனை பார்த்து கேட்டேன் என பேசுகிறார்.

இதுவே நீ பாரின்ல இருந்தியே இதுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணி இருக்கியா குழந்தை பெத்து இருக்கியான்னு கேட்டா உனக்கு எப்படி இருக்கும் என பேசுகிறார் அதற்கு ரோகிணி நான் கேஷுவலா தான் கேட்டேன் என கூறி சமாளிக்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.