ரோகிணி கர்ப்பமா.? வீட்டில் உள்ளவர்களிடம் அணுகுண்டை வீசிய மீனா..!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ஆபீசுக்கு வந்து ஒருவர் கிரெடிட் கார்ட் உங்களுக்கு சேங்க்சன் ஆகி உள்ளதாக கூறுகிறார். அதற்கு மனோஜ் மிகவும் சந்தோஷப்படுகிறார் உடனே மனோஜை ரோகிணி தனியாக அழைத்து இந்த கிரெடிட் கார்டு வேணுமா என கேட்கிறார் கண்டிப்பாக வேணும் என மனோ கூறிவிடுகிறார்.

மேலும் மனோஜ் ரோகினியை பார்த்து இந்த கார்டு வந்ததும் நாம ரெண்டு பேரும் கோவா போயிட்டு வந்து விடலாம் என கூறுகிறார். அப்படி இருக்க அடுத்த காட்சியில் ரோகிணி மற்றும் வித்யா இருவரும் ஹாஸ்பிடலுக்கு வந்துள்ளார்கள் இப்பொழுது செக்கப் செய்ய வேண்டும் என கூறுகிறார்கள் அதற்கு வித்யா நீ ஏற்கனவே குழந்தை பெத்தவ தானே உனக்கெல்லாம் எந்த பிரச்சினையும் இருக்காது என கூறுகிறார்.

அதெல்லாம் கரெக்ட் தாண்டி ஆனால் குழந்தை பிறக்க லேட் ஆகுது என பேசுகிறார். அதே போல் மீனா மற்றும் சீதா இருவரும் அதே ஹாஸ்பிடலுக்கு வந்துள்ளார்கள் சீதாவுக்கு இன்டர்வியூ என்பதால் வந்திருக்கிறார் சீதா உள்ளே சென்றவுடன் மீனா பதட்டத்தை தான் இருக்கிறார் அப்பொழுது மீனாவுக்கு ஒருவர் கால் செய்து 50 மாலை ஆர்டர் வந்துள்ளது கட்டிவிடலாமா என கேட்கிறார்.

உடனே மீனாவும் சரி வருகிறேன் எனக் கூறி விடுகிறார். அடுத்த காட்சியில் ரோகினி ஹாஸ்பிடல் உள்ளே டாக்டரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது முதல் குழந்தை பிறக்கும்போது ஏதாவது கிரிட்டிக்கல் ஆகிவிட்டதா என கேட்ட இல்லை 2 3 ஹவர்சில் வலி வந்து டெலிவரி ஆகிவிட்டது என கூறுகிறார்.

அதற்கு டாக்டர் ஸ்ட்ரெஸ் ஆகிறீர்களா என கேட்கிறார் அதற்கு ரோகிணி வீட்டு சூழ்நிலை காரணமாக கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஆகிறேன் என கூறுகிறார். உடனே உங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது இந்த மாத்திரையை போடுங்கள் என எழுதிக் கொடுக்கிறார். அதே போல் சீதா எப்பொழுது வருவார் என மீனா பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சீதா பார்த்தவுடன் மீனா ஆர்டர் வந்துள்ளதை சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

உடனே சீதா உட்கார்ந்து கொண்டிருக்கும் போது ரோகிணி மற்றும் வித்யா இருவரும் டேப்லெட் வாங்குவதற்காக வருகிறார்கள் அப்பொழுது சீதா அவர்களை பார்த்து விடுகிறார், பேச அருகில் செல்வதற்கு முன்பு உங்களை எச்சார் மேனேஜர் கூப்பிடுகிறார் என சீதாவை அழைத்து செல்கிறார்கள். சீதா உள்ளே சென்று வேலை கிடைத்ததை சந்தோஷத்துடன் ினாவிடம் கூற மீனாவும் சந்தோஷப்படுகிறார்.

அது மட்டும் இல்லாமல் ரோகினி ஹாஸ்பிடலுக்கு வந்துள்ளதை கூற மீனா தவறாக புரிந்து கொண்டு இங்கு ஒருவேளை ரோகிணி கர்ப்பமாக இருக்கிறாரோ என மீனா சந்தோஷப்படுகிறார். வீட்டிற்கு வந்த மீனா கேசரி செய்து அனைவருக்கும் கொடுக்கிறார்கள் அப்பொழுது விஜயா வழக்கம் போல் மீனாவை உன் தங்கச்சி பாஸ் பண்ணதுக்கு என் வீட்டு சக்கரையை காலி பண்றியா என பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த ஸ்வீட் ரோகிணிக்கும் தான் என கூறுகிறார் இதனால் அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார் என மீனா கூற போகிறார் என தெரிய வருகிறது.