ஜீவா உடன் லிவிங்கில் இருந்தியே ஏன் குழந்தை உருவாகவில்லை.? மனோஜை சந்தேகப்பட்டு செக்கப்புக்கு அழைத்த ரோகிணி.. பயத்தில் நடுங்கிய மனோஜ்.

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கடைக்கே கிரெடிட் கார்டு டிபார்ட்மெண்டில் இருந்து வருகிறார்கள் அப்பொழுது 10 லட்சம் மதிப்புள்ள கிரெடிட் கார்டு உங்களுக்கு ஆபரில் கொடுக்கிறோம் எனக் கூற மனோஜ் வாயை பிளந்து கொண்டு அதனை வாங்கி விடுகிறார்.

கிரெடிட் கார்டு வந்தவுடன் நாம் கோவா போகலாம் என ரோகிணியை பார்த்து கூறுகிறார். இந்த நிலையில் மீனா மற்றும் சீதா இருவரும் ஹாஸ்பிடலுக்கு இன்டர்விற்காக வந்துள்ளார்கள். அதேபோல் ரோகிணி மற்றும் வித்யா இருவரும் ரோகிணியை செக்கப் செய்வதற்காக வந்துள்ளார்கள்.

ரோகிணியை பார்த்த டாக்டர் உங்களுக்கு உடம்பில் ஒரு பிரச்சனையும் கிடையாது ஸ்ட்ரெஸ் ஆக இருக்கிறீர்களா என கேட்க ஆமாம் என கூறுகிறார் அதனை குறைத்தாலே சரியாகிவிடும் என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் அந்த சமயத்தில் வித்யா நீ பொய் சொல்லி கல்யாணம் பண்ணல உனக்கு பத்து வயசுல ஒரு பையனே கிடையாது அப்புறம் எப்படி ஸ்டிரஸ் ஆகும் என கிண்டல் அடிக்கிறார்.

மற்றொரு பக்கம் மீனா சீதா இன்டர்விற்காக உள்ளே போனதால் காத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது 50 மாலை கட்ட வேண்டும் என ஆர்டர் வருகிறது உடனே சீதா வந்தவுடன் அவரிடம் சொல்லிவிட்டு மாலை கட்ட போகிறார். ரோகிணி ஹாஸ்பிடல் செக் அப் செய்துவிட்டு மாத்திரை வாங்கும் நேரத்தில் சீதா ரோகிணியை பார்க்க அதனை மீனாவிடம் கூறுகிறார் ஆனால் மீனா தவறாக புரிந்து கொண்டு ரோகிணி கர்ப்பமாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்.

அதனை வீட்டில் வந்து கூறுகிறார் மீனா இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் ரோகிணி மனோஜை பார்த்து நாம் ஒரு செக்கப் செய்து கொள்ள வேண்டும் என கூறுகிறார் அதற்கு மனோஜ் எனக்கெல்லாம் ஒரு பிரச்சனையும் கிடையாது ஐ அம் ஆல்ரைட் எனக் கூறுகிறார்.

உடனே ரோகினி ஜீவாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தியே  அப்பொழுது ஏன் குழந்தை உருவாகவில்லை என கேள்வி எழுப்புகிறார் இதனால் மனோஜ் முகம் பயத்தில் உறைகிறது. ஒருவேளை மனோஜ்க்கு ஏதாவது பிரச்சனை இருக்குமோ என ரோகிணி சந்தேகப்படுகிறார் அதனால் டாக்டரிடம் செல்ல வேண்டும் என அழுத்தமாக கூறுகிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.