மீண்டும் விஜயாவின் ஆட்டம் ஆரம்பம்.. என்னையும் எங்க அம்மா தூக்கி எறிஞ்சிட்டாங்க முத்து சொன்ன சோகக்கதை..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் பார்வதி டான்ஸ் கிளாஸ் ஆரம்பிப்பதற்காக ரெடியாக இருக்கிறார் அப்பொழுது இரண்டு ஜோடிகள் உள்ளே வருகிறது புதுசாக வந்துள்ளீர்களா. ஏற்கனவே இவங்க டிரஸ் வாங்கிட்டு போனவங்க தானே என விஜயா கேள்வி எழுப்புகிறார் ஆமாம் என பார்வதி சொல்ல இருவரும் உள்ளே வருகிறார்கள் உடை மாற்றிவிட்டு வாருங்கள் எனக் கூற அந்த பெண் பின்னாடியே அந்த பையனும் போகிறார் அதன் பிறகு அந்தப் பையனை அழைத்து அங்க நீ போகக்கூடாது இந்த பக்கம் போ என கூறி விடுகிறார்கள்.

அனைவரும் உடை மாற்றி விட்டு டான்ஸ் கிளாஸ் ஆரம்பிக்கிறார்கள் அப்பொழுது விஜயா கற்றுக் கொடுக்கிறார் ஆனால் அந்த பையன் அந்த பொண்ணை பார்த்து கொண்டு இருக்கிறார் அதேபோல் அந்த பொன்னும் பையனை பார்த்துக் கொண்டிருக்க கிளாஸ் முடிய பதினைந்து நிமிடம் பிரேக் கொடுக்கிறார்கள் அந்த பிரேக்கில் இரண்டு ஜோடிகளும் ஒளிவு மறைவாக நின்னு ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அப்பொழுது டைம் ஓவர் என விஜயா சொல்ல உள்ளே வருகிறார்கள் விஜயாவை புகழ்ந்து தள்ளுகிறார் அந்த பையன் இது மாதிரி சொல்லிக் கொடுக்க யாருமே கிடையாது நாங்க எக்காரணத்தை கொண்டும் இந்த கிளாசை விட்டு போக மாட்டோம் என உறுதி அளிக்கிறார்கள். அதற்கு காரணம் இரண்டு காதல் ஜோடிகளும் வீட்டுக்கு தெரியாமல் இங்கே மஜா பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் வீட்டில் இருந்த முத்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது ரோகிணி உள்ளே வருகிறார் அதேபோல் ரவி, சுருதி, மீனா, அண்ணாமலை, மனோஜ், விஜயா என அனைவரும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் முத்துவை மனோஜ் நீ கார் ஓட்ட வேண்டாம் எனக் கூற அதற்கு மீனாவுக்கு கோவம் வருகிறது அவர் ஒரு ஓனர் அவர் பத்தி எதுவும் பேசக்கூடாது என திட்டவட்டமாக கூறுகிறார். உடனே முத்து என்ன சொல்ற மீனா என கேட்க ஆமா நீங்க ரெண்டு காருக்கு ஓனர் தான என பேசுகிறார் உடனே முத்துவும் அதிர்ச்சியாகி ஆமா இல்ல நான் இனிமேல் ஓனர் என பேசுகிறார் அதே போல் அண்ணாமலை அழைத்து நான் ஓனர் என்று கூறுகிறார்.

இனிமே நீங்க யாரு கேட்டாலும் ரெண்டு காருக்கு ஓனர் எனக்கு கூறுங்கள் எனவும் கூறுகிறார். அதேபோல் ரவி ஸ்ருதி என அனைவரும் ஓனர் என அழைக்க போயிட்டு வரேன் ஓனர் என ரவி கூறி விட்டு செல்கிறார். உடனே அனைவரும் கலைந்து செல்ல அப்பொழுது மீனா என்னங்க கிரிஷ் பத்தி சொல்லவே இல்லை என பேசுகிறார். மற்றொரு பக்கம் விஜயா கிளாஸ் முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் பொழுது அந்த காதல் ஜோடியில் அந்த பையன் நானே டிரா பண்ணுகிறேன் என கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் அந்தப் பையன் அடிக்கடி மாஸ்டர் என அழைக்கிறார் உடனே வீட்டிற்கு வந்து விஜயாவை டிராப் பண்ணிவிட்டு நான் தான் பேக்கை வீட்டில் வைப்பேன் என அடம் பிடித்து எடுத்துக் கொண்டு வருகிறார்.

அந்தப் பையன் ஓவராக குனிந்து வருவதால் அவரை சந்தேகப்படும் முத்து பார்க்கிறார் அது மட்டும் இல்லாமல் இவன் என் ஸ்டுடென்ட் எனவும் கூறுகிறார் விஜயா நான் ஒரு டான்ஸ் மாஸ்டர் எனவும் சொல்ல உடனே முத்துவுக்கு சிரிப்பு வருகிறது அது மட்டும் இல்லாமல் உடனே மீனாவை பார்த்து மாஸ்டர் ஒரு டீ போட்டு எடுத்திட்டு கொண்டு வா என கிண்டல் அடிக்கிறார். விஜயா எதிர்த்து பேச உடனே டீ மாஸ்டர  டீ மாஸ்டர்ன்னு சொல்லுவாங்க பரோட்டா மாஸ்டர பரோட்டா மாஸ்டர் தான் சொல்லுவாங்க என பேசுகிறார்கள் ரவியும் ஆமாம் எனக் கூற விஜயாவுக்கு கோவம் வருகிறது.

மேடம் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து உட்கார வைக்கிறார்கள் அப்பொழுது அனைவரும் வந்தவுடன் முத்துவுக்கு விபூதி எடுத்து கொடுக்கிறார் உடனே முத்து கிரிஷ் பற்றிய உண்மையை கூறுகிறார் கிரிஷின் அம்மா உயிரோடு இருக்கிறார்கள் அந்தப் பையனை தூக்கி எறிந்து விட்டு துபாய் சென்றுவிட்டார் பணம் மட்டும் அனுப்பி கொண்டு இருக்கிறார் என பேச மனோஜ் இது பெரிய ஸ்கேம் ஆச்சே இப்படிலாம் ஏமாத்தி இருக்காளா என பேசுகிறார்.

மேலும் பேசிய முத்து கிரிஷின் பாட்டி அத்தை என்றுதான் சொல்லி வளத்துள்ளார்கள் என்ற உண்மையையும் கூறுகிறார். உடனே மனோஜ் அந்த லேடி இந்நேரம்  யாரையாவது ஏமாற்றி திருமணம் செஞ்சி இருப்பா அந்த கேனப்பய யாரோ என மனோஜ் பேசுகிறார் அப்பொழுது ரோகினி கீழே நின்று அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதேபோல் விஜயாவும் அந்த பொண்ணை திட்டுகிறார். அதேபோல் ஸ்ருதியும் எப்படி தான் பெத்த பிள்ளையை விட்டுட்டு போக மனசு வந்ததோ என  கேட்கிறார்.

மேலும் இப்படியும் இருப்பாங்களா என பேச அதற்கு முத்து ஏன் என்ன எங்க அம்மா தூக்கி எறிஞ்சிட்டு போகலையா என உண்மையை உடைக்கிறார் உடனே விஜயாவின் முகம் மாறுகிறது வீட்டில் உள்ள அனைவரும் பரிதாபமாக முத்துவை பார்க்கிறார்கள் உடனே சுதாரித்துக் கொண்ட முத்து அப்படிதான் கிரிஷும் பாதிக்கப்பட்டிருக்கிறான் என கூறுகிறார். முத்து எதர்ச்சியாக விஜயாவின் உண்மை முகத்தை தற்போது கிழித்தெறிந்துள்ளார். இத்துடன் எபிசோட் முடிகிறது.