ஓவரா நடிகிராயே கல்யாணி.. மீனாவுக்கு வந்த சந்தேகம்.. வீட்டை விட்டு வெளியே போக நாடகம் ஆடும் ரோகிணி.. மனோஜ் சொன்ன அந்த ஒத்த வார்த்தை.?

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி தான் ஏற்கனவே கர்ப்பம் இருந்ததை ஒப்புக்கொள்கிறார் ஆனால் அந்த கர்ப்பத்திற்கு காரணம் மனோஜ் தான் என மனோஜ் மீது பழியை போடுகிறார்.

இதை கேட்ட குடும்பத்தார் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் அது மட்டும் இல்லாமல் இது என்னுடைய தனிப்பட்ட விஷயம் இதில் யாரும் கேள்வி கேட்க உரிமை இல்லை என்பது போல் பேசுகிறார்.

விஜயா கேட்டதற்கு உங்ககிட்ட சொல்லக்கூடாதுன்னு கிடையாது அந்த சமயத்தில் எங்க அப்பா ஜெயிலுக்கு போனதால் நான் ரொம்பவும் வருத்தப்பட்டேன். அதனால் தான் இப்படி ஆனது என ஒரு சப்பை கட்டு கட்டுகிறார்.

மேலும் இது எப்படி உங்களுக்கு தெரியும் என கேள்வி கேட்க அண்ணாமலை சொன்னார் எனவும் அண்ணாமலை முத்து சொன்னான் எனவும் கடைசியாக சுருதி மீனாதான் சொன்னார் எனவும் கூறுகிறார். இதனால் ரோகிணி என் பர்சனல் வாழ்க்கையில் தலையிட நீ யார் என்பது போல் மீனாவை பார்த்து பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் விஜயாவும் மீனாவை திட்டுகிறார் எல்லா பிரச்சனைக்கும் காரணம் கடைசியில் நீதான் இருக்கிறாய் எனவும் கூறுகிறார் இதனால் மீனா அழுகிறார். அதே போல் இனிமேல் ரோகிணி வாழ்க்கையில் தலையிடக்கூடாது என கூறும் படி அண்ணாமலை இடம் பேச அண்ணாமலை அதற்கு அப்படியெல்லாம் சொல்ல முடியாது குடும்பம்னா 1008 பிரச்சனை வரத்தான் செய்யும் என பேசிக்கிறார்.

மேலும் அண்ணாமலை அவரவர்கள் வேலையை பாருங்கள் தேவையில்லாமல் இதை பெருசு படுத்தி பசங்களுக்குள்ள சண்டையை மூட்டி விடாத என விஜயாவை பார்த்து கூறி விடுகிறார். மீனா அழுது கொண்டிருக்க முத்து அவரை சமாதானப்படுத்துகிறார் அப்பொழுது மீனா இல்ல ரோகிணி வாழ்க்கையில் ஏதோ ஒரு மரமும் இருக்கிறது என தென்னந் தெளிவாக கூறுகிறார்.

ஆனால் முத்து இனிமே அவங்க வாழ்க்கையில் எப்படி நடந்தா என்ன நடந்தா  நமக்கு என்ன அதை எதையும் கண்டு கொள்ள கூடாது எனவும் கூறுகிறார். அதே போல் ரோகிணி இதனை ஒட்டு கேட்டு விட்டு விஜயாவிடம் சென்று எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மன உளைச்சல் ஆகுது அதனால் வீட்டை விட்டு வெளியே போகிறோம் என பேசுகிறார் அதற்கு விஜயா நீ ஏன் போகணும் அந்த மீனாவை நான் ஓட விடுறேன் எனக்கு கொஞ்சம் டைம் கொடு என்ன பேசுகிறார்.

மற்றொரு பக்கம் ரோகிணி மற்றும் மனோஜ் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மனோஜ் என்னுடைய குழந்தை இருந்திருந்தால் இப்பொழுது ஐந்து மாதமாக இருக்கும் என சந்தோஷப்படுகிறார் உனக்கு வருத்தம் இல்லையா என மனோஜை பார்த்து ரோகிணி கேட்க எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என பேசுகிறார்.

நாம ரெண்டு பேருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என கன்ஃபார்ம் ஆகிவிட்டது அதனால் கண்டிப்பாக நமக்கு குழந்தை பிறக்கும் என பேசுகிறார்கள் இதனால் ரோகிணி மனோஜை கட்டி பிடித்து அழுகிறார் இதனால் தான் உன்னை என்னால் விட முடியாமல் இருக்கிறது அதற்காக தான் இவ்வளவு பொய் சொல்கிறேன் என ரோகிணி மனதுக்குள் பேசிக் கொள்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது,.