மீண்டும் மீடியாவில் பிரபலமான முத்து… ஸ்ருதியிடம் கொளுத்தி போட்ட மீனா.. அணுகுண்டாக வெடிக்கப் போகும் பிரச்சனை..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ஏற்கனவே ரோகிணிக்கு குழந்தை பிறந்ததை தெரிந்து கொண்டு அதிர்ச்சியில் இருக்கிறார். அந்த சமயத்தில் விஜயா டீ கேட்க அவர் காபி போட்டு கொடுக்கிறார் அதனை குடித்துப் பார்த்துவிட்டு விஜயா இது என்ன என கேட்கிறார்.

மீனா டி என சொல்ல உடனே ரோகிணியை குடித்து பார்த்துவிட்டு சொல்லு என கூறுகிறார். அதனை குடித்து பார்த்துவிட்டு இது காபி தான் என சொல்ல மீனா ரோகிணியை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் ஸ்வீட் கொடுத்து நல்ல செய்தி என கூறுகிறார்கள் உடனே விஜயா ஒருவேளை கர்ப்பமாக இருக்கிறாரோ என சந்தோஷப்படுகிறார் பிறகு அதெல்லாம் இல்லை எங்கள் கம்பெனியில் 15 டிவி சேல்ஸ் ஆகி உள்ளது என கூறுகிறார்.

அந்த சமயத்தில் ஸ்ருதி மற்றும் ரவி வர அண்ணி எங்க முத்து அண்ணன் என ரவி கேட்கிறார் அதற்கு இன்னும் வரவில்லை எனக் கூற அவர் பண்ணிய வேலை தெரியுமா என பேசுகிறார்கள் என்ன வழக்கம் போல் மறுபடியும் ஏதாவது பிரச்சனை பண்ணிட்டானா என விஜயா பேசுகிறார்.

அதெல்லாம் கிடையாது என ரவி கூற அண்ணாமலை என்ன ஆச்சு நடந்ததை சொல்லு என பேசுகிறார் அந்த சமயத்தில் முத்து மாலையும் கழுத்துடன் வருகிறார் அப்பொழுது இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா என கூறி காரில் டெலிவரி செய்யப் போன பெண்ணுக்கு பாதியிலேயே வலிவந்தது அதனால் மார்க்கெட்டுக்கு சென்று தனக்கு தெரிந்த அக்காவிடம் கூறினேன் சுகப்பிரசவமாக மாறிவிட்டது எனக் கூறுகிறார்.

அது மட்டும் இல்லாமல் அந்த குழந்தையை அந்த அம்மா என்கிட்ட தான் முதலில் கொடுத்தார்கள் அதை தூக்கிய உடன் எனக்கு என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது என கூறுகிறார். ஹாஸ்பிடல் போகாம எதுக்கு மார்க்கெட் போனீங்க ஏதாவது ஆயிருந்தா என்ன ஆகும் என நெகட்டிவ் ஆக மனோஜ் பேச உங்களுக்கு பாசிட்டிவா பேச தெரியாதா என சுருதி திட்டுகிறார்.

உடனே விஜயா எல்லா இடத்துலயும் நல்லது நடக்குது நம்ம குடும்பத்தில் தான் ஒரு வாரிசு கூட வரல என பேசுகிறார் ஆனால் அண்ணாமலை நீ செஞ்ச நல்லது புண்ணியம் எல்லாமே உனக்கு தான் சேரும் கண்டிப்பா உனக்கும் ஒரு குழந்தை பிறக்கும் என வாழ்த்துகிறார்.

உடனே ஸ்ருதி சந்தோஷமாக மீனாவிடம் பேசிக் கொண்டிருக்க மீனா டல்லாக இருக்கிறார் உடனே என்ன ஆச்சு எனக் கேட்க முத்து அடித்தாரா இல்ல திட்டினாரா நான் போய் பேசிக்கொள்கிறேன் என வெளியே செல்ல அதெல்லாம் ஒன்னும் கிடையாது உள்ளே வா நான் சொல்றதை யார்கிட்டயும் சொல்லக்கூடாது எனக்கூறி ரோகிணி ஏற்கனவே குழந்தை பெற்றுள்ளார் என்பதை ஸ்ருதியிடம் கூறுகிறார் சுருதி அதிர்ச்சியில் நிற்கிறார்.

அடுத்த நாள் ப்ரோமோவில் விஜயா ரோகினி இடம் நீ ஏற்கனவே கரு உண்டா இருந்தியா உன் வாழ்க்கையில் நடக்கிற எல்லாமே மர்மமா இருக்கு என பேசுகிறார் விஜயா இத்துடன் ப்ரோமோ முடிகிறது.