மீனாவோட நிலைமைய கொஞ்சமாவது யோசிச்சு பாத்தீங்களா.. காபி வேனாம் சரக்கு இருக்கா.. என் பொண்டாட்டியே என் பேச்சை கேட்கல முத்து கவலை.

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது மீனா பேச்சு கொடுத்ததற்கு முத்து என் பொண்டாட்டி என் பேச்சை கேக்கல அவளுக்கு அவன் தம்பி தான் முக்கியம், அப்ப என்ன எங்க வச்சிருக்கான்னு இப்ப தெரிஞ்சுடுச்சு நான் தான் தேவையில்லாம தலையில தூக்கி வச்சுட்டு ஆடுனேன் என பேசுகிறார் இதனால் மீனா அப்படியெல்லாம் கிடையாது என கூறி வருத்தப்படுகிறார்.

அதேபோல் சாப்பிடலாம் என மீனா முத்துவை அழைக்க என்னையவே வேணாம்னு சொல்லிட்ட உன் கையால சாப்பிடறதா என பிடிவாதமாக கூறுகிறார்.

உடனே முத்து தலகாணி மற்றும் பெட் சீட்டை கீழே எடுத்து போட்டு விட அதற்கு மீனா நீங்க மேல படுத்துக்கோங்க நான் கீழே படுத்துகிறேன் என கூறுகிறார் நான் மேல தான் படுப்பேன் இது உனக்காக தான் கீழ எடுத்து போட்டேன் எனவும் கூறுகிறார்.

அந்த சமயத்தில் விஜயா வருகிறார் அப்பொழுது மீனா விஜயாவிடம் புள்ள குடிச்சுட்டு வர்றத சந்தோஷமா பாக்குற ஒரே அம்மா நீங்கதான் என்னவும் கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் இவன் கொஞ்ச நாளா குடிக்காம இருந்தான் திறந்துட்டாங்கன்னு நினைச்சேன் ஆனா மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறிவிட்டது என கூறுகிறார். மற்றொரு காட்சியில் அடுத்த நாள் காலையில் அண்ணாமலை வர அண்ணாமலைக்கு காபி கொடுக்கிறார் அதே போல் முத்தூக்கும் காபி கொடுக்க முத்து எனக்கு காபி வேணாம் உன் கையால சரக்கு வேணா குடு என கூறுகிறார்.

மேலும் முத்து குளிக்க போக கார் சாவியை மீனா எடுத்து வைத்துக் கொள்கிறார். அப்பொழுது அண்ணாமலை முத்துவை பார்த்து என்ன தேடிக் கொண்டிருக்கிறாய் என கேட்க கார் சாவியை இங்கதான் வைத்தேன் காணும் என கூறுகிறார் நைட் நிதானமாக தான் வந்தியா எனவும் அண்ணாமலை முத்துவை பார்த்து கேட்கிறார் அதற்கு முத்து முழித்துக் கொண்டு லைட்டாக எனக் கூறுகிறார்.

உடனே விஜயா முத்துவை ஏற்றி விடுகிறார் மீனாவிடம் அண்ணாமலை இனிமே இவன நல்லா பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு இனிமே குடிச்சிட்டு வந்தா வீட்டுக்குள்ளேயே விடாதே என கூறுகிறார் சரி மாமா எனவும் மீனா கூறிவிட்டு கார் சாவியை தேடுவது போல் ஒளித்து வைத்திருந்ததை எடுத்துக் கொடுக்கிறார்.

முத்து கார்செட்டுக்கு போகிறார் அப்பொழுது செல்வம் நீ என் சவாரிக்கு போகவில்லை எனக் கேட்கிறார் அதற்கு சவாரிக்கு போய் என்ன செய்ய போறோம் அவ என்னை ஏமாத்திட்டா என பேசுகிறார் அந்த சமயத்தில் மீனாவின் அம்மா மற்றும் தங்கை இருவரும் வருகிறார்கள் எல்லாத்தையும் காரணம் நாங்க தான் நாங்க தான் மீனாவ வர சொன்னோம் அதனால நாங்க மன்னிப்பு கேட்கிறோம் என கூற அதற்கு நீங்கள் எதற்கு மன்னிப்பு கேட்கணும்  நீங்க என்ன தப்பு பண்ணீங்க என முத்து பேசுகிறார்.

மேலும் மீனாவின் அம்மா மீனாவுக்கு உங்கள விட்ட யார் இருக்கா என பேச அவளுக்கு தான் தம்பி இருக்கானே அவளுக்கு நான் முக்கியமே கிடையாது தேவையே கிடையாது என வருத்தத்துடன் பேசுகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.