ரோகினியின் கதையை சொல்லி முத்து மீனாவை கண்ணீரில் மிதக்க வைத்த க்ரிஷின் பாட்டி..! ரவியை ரெஸ்டாரண்டில் வைத்து அசிங்கப்படுத்திய சுருதியின் அம்மா..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில்  முத்து மீனாவுக்காக புடவை வாங்கி வந்துள்ளார் அதனை கட்டிக் கொண்டு மீனா வெளியே வர அதை  பார்த்து பிரமிப்பாக வர்ணித்து வருகிறார் அது மட்டுமில்லாமல் போனை எடுத்து ஒரு செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் இன்னொரு பாக்ஸ் இருக்க அது என்ன என கேட்க இது க்ரிஷ் அவனுக்கு உடை என கூறுகிறார் முத்து.

சரி அவனை நேரில் பார்த்து கொடுத்து விடலாம் என இருவரும் பேசிக் கொள்கிறார்கள் அடுத்த நாள் கிரிஷ் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து எட்டி எட்டிப் பார்க்கிறார் எங்கு ரோகிணி வந்துவிட்டாரா என ஏங்கிப் போய் நிற்கிறார். அப்பொழுது கிரிஷின் பாட்டி அவ வருவா உள்ள வா என அழைத்து செல்ல வருத்தத்துடன் கிருஷ் இருக்கிறார்.

அதேபோல் ரவி ரெஸ்டாரண்டுக்கு சுதா வந்து ஒரு பிளாங் செக்கை கொடுத்து இதை எவ்வளவு வேணாலும் பீல் பண்ணிக்கொண்டு ரெஸ்டாரண்ட் ஆரம்பிங்கள் ஆனால் குழந்தையை தள்ளி போட வேண்டாம் என கூறிவிடுகிறார். இதனால் ரவி எவ்வளவு சொல்லியும் சுதா காதில் வாங்காமல் சென்று விடுகிறார். இதனால் கோபப்பட்ட ரவி நேராக ஸ்டுடியோ சென்று ஸ்ருதியை சந்தித்து செக்கை வீசிவிட்டு வருகிறார் அப்பொழுது இருவரும் பேசிக்கொள்கிறார்கள் அப்பொழுது நான் பணம் கேட்டேனா நான் லோன் போட்டு ரெஸ்டாரன்ட் ஆரம்பித்துக் கொள்கிறேன் எதற்காக பணம் என திட்டுகிறார் நான் கேட்கவில்லை என சுருதி கூறி விடுகிறார்

மற்றொரு பக்கம் ரோகினி வந்து விடுகிறார் உடனே துள்ளி குதித்து போய் க்ரிஷ் ரோகிணியை கட்டிப்பிடித்து அம்மா நீ வந்துட்டியா என கொஞ்சி மகிழ்கிறார்கள். உள்ளே வந்த ரோகினி கிருஷ்க்கு வாங்கி வந்த உடையை கொடுக்கிறார் கிரிஷ் அந்த உடையை போட்டுக்கொண்டு வந்து ரோகினி இடம் காட்ட சூப்பராக இருக்கிறது என கூறுகிறார் உடனே பர்த்டே கொண்டாட பக்கத்து வீட்டுக்காரர்கள் உள்ளே வருகிறார்கள்.

அப்பொழுது ரோகிணியை பார்த்து ரொம்ப நாளா ஆளையே காணோம் என பேசுகிறார்கள் ரோகிணி கொஞ்சம் வேலை இருந்ததாக கூறுகிறார் அதே போல் கேக் வெட்டுவதற்கு ரெடியாகிறார்கள். அந்த சமயத்தில் ரோகினி கிச்சனுக்கு செல்ல முத்து மற்றும் மீனா வீட்டிற்கு வருகிறார்கள்.

இருவரும் உள்ளே வந்து கிருஷ்க்கு புது உடையை கொடுக்க சூப்பராக இருக்கிறது என கூறுகிறார் கிருஷ் அதுமட்டுமில்லாமல் கேக் வெட்டலாம் என பேசும் பொழுது க்ரிஷ் அம்மா எனக் கூற முத்து மற்றும் மீனா இருவரும் அதனை புரிந்து கொண்டு ரோகினியின் அம்மாவிடம் தனியாக பேச வேண்டும் என கூறுகிறார்கள்.

ரோகிணியின் அம்மாவிடம் க்ரிஷின் அத்தை ஏன் வரவில்லை என பேசிக்கொண்டு இருக்க போனை போடுங்க நான் பேசுகிறேன் என கூறுகிறார்கள் அப்பொழுது ரோகினியின்  அம்மா க்ரிஷ்க்கு  அத்தை கிடையாது என் மகள் தான் இவனுடைய அம்மா என உண்மையை கூறுகிறார்கள் இதனால் அதிர்ச்சி அடைகிறார் முத்து மற்றும் மீனா.

அதேபோல் ரோகிணிக்கு நடந்த கல்யாணம் பற்றியும் கூறுகிறார் ஒரு வயதான நபரை பணக்காரர் என்று நினைத்து கல்யாணம் பண்ணி வைத்தோம் ஆனால் அவர் எதிர்பாராத விதமாக உடல்நிலை மோசமாகி இறந்து விட்டார் அதனால் இந்த பையனை நாங்களே வளர்த்துக் கொண்டு வருகிறோம் என உண்மையை கூறிக் கொண்டிருக்கிறார்.

ரோகினியின் அம்மா ரோகிணியின் கதையைப் பற்றி தான் கூறிக் கொண்டிருக்கிறார் ஆனால் முத்து மற்றும் மீனா பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் முத்து மீனா இருவரும் கிளம்பி போய்க் கொண்டிருக்கும் பொழுது திடீரென மீனா கிரிஷை தத்து எடுத்துக் கொள்ளலாமா என பேசுகிறார் முத்துவும் காரை அதிரடியாக நிறுத்துகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.