மேடையில் அவமானப்பட்டு நிற்க்கும் முத்து மீனா… ரோகினியின் டேலண்டை பார்த்து கை தட்டும் பார்வையாளர்கள்..

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் மீனா முத்து இருவரும் நாங்கள்தான் அந்த போட்டியில் ஜெயிப்போம் என கூறுகிறார்கள் உடனே விஜயா இருந்தாலும் உனக்கு தைரியம் அதிகம் தான் என பேசுகிறார் யார் ஜெயிச்சா என்ன மூணு பேர்ல யாரு ஜெயிச்சாலும் நமக்கு பெருமைதான் என அண்ணாமலை கூறுகிறார்.

உடனே அனைவரும் அவரவர்கள் ரூமிற்கு செல்கிறார்கள் அப்பொழுது ரோகிணி மனோஜிடம் நாம் இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா என கேட்கிறார் கண்டிப்பாக கலந்து கொள்கிறோம் நாமதான் ஜெயிப்போம் கல்யாணத்துக்கு முன்னாடியே நாம இந்த மாதிரி போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்துள்ளோம் ஞாபகம் இருக்கிறதா என கேட்கிறார்.

நமக்கு அவ்வளவு வேலை இருக்கு அதெல்லாம் விட்டுட்டு இதுல கலந்து கொள்ளணுமா என மீண்டும் கேட்க ஒரு லட்ச ரூபா நாம் ஏன் டைம் வேஸ்ட் பண்றோம் ஒரு லட்சம் கிடைச்சா ரெண்டு மாசத்துக்கு வீட்டில் கொடுத்துடலாம் என பேசுகிறார் பிறகு இருவரும் ஓகே என சொல்லிவிட்டு கலந்து கொள்ள ரெடி ஆகிறார்கள்..

மற்றொரு காட்சியில் ஸ்ருதி ரவி இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது முத்துமீனா இந்த போட்டியில் என்னென்ன கேள்வி கேட்பார்கள் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் உடனே ரவி ஸ்ருதியிடம்  கேட்கலாம் என மாடிக்கு வருகிறார்கள் அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து ரவியை பிடித்து அடிக்க போகிறார் உடனே நாங்கள் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கொள்ள யார் வலிமையானவர் என்று தெரிந்து கொள்கிறோம் எனக் கூறுகிறார்கள்.

மற்றொரு காட்சியில் என்ன மாதிரி கேள்வி கேட்பார்கள் என சுருதி கூறிக் கொண்டிருக்கிறார் அடுத்த நாள் போட்டி ஆரம்பிக்கிறது அனைவரும் இண்ட்ரொடக்சன் கொடுக்கிறார்கள் அப்பொழுது முத்துமீனா டிரைவர் பூ கட்டுபவர் என கூறியவுடன் யாருமே கைத்தட்டவில்லை இதனால் இருவருக்கும் மூஞ்சி சோகமாக மாறுகிறது. அடுத்ததாக பெண்களை மட்டும் மேடைக்கு அழைக்க என்ன டேலண்ட் என கேட்க அனைவரும் அவர் டேலண்டை கூறுகிறார்கள் ஆனால் மீனா என்ன டேலண்ட் என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் பொழுது முத்து எழுந்து அவள் கண்ண மூடி கொண்டே பூ கட்டுவாள் என கூறுகிறார்.

உடனே ஒவ்வொருவராக அவரவர்கள் டேலண்டை நிரூபித்து வருகிறார்கள் அப்பொழுது ரோகிணி ஒரு ஆணை பெண் போல் வேடம் இட்டு காமிக்கிறார் உடனே அனைவரும் கைதட்டுகிறார்கள் அடுத்தது சுருதி மாமியார் வாய்ஸில் பேச ஆரம்பிக்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.