மனோஜ் சொன்னதைக் கேட்டு வருத்தப்படும் ரோகிணி.. முத்துவால் கண்கலங்கிய மீனா.. ரவியால் அதிர்ச்சி அடைந்து எழுந்த சுருதி

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து திடீரென வீட்டிற்கு ஒரு கட்டிலை கொண்டு வருகிறார் அதனைப் பார்த்து அனைவரும் ஏளனமாக பேச. அதற்கு முத்து நாங்கள் புதிதாக ரூம் கட்ட போகிறோம் அதற்காக இந்த கட்டில் என கூறுகிறார் இது நல்ல ஸ்ட்ராங்கான பர்மா தேக்கால் செய்யப்பட்டது எனக் கூற நீ எங்கேயாவது ஏமாந்து இருப்ப என மனோஜ் கிண்டல் அடிக்கிறார்.

அடுத்ததாக ஸ்ருதியும் வந்து இந்த கட்டிலை பற்றி பெருமையாக பேச அதற்கு மனோஜ் சும்மா வாய்க்கு வந்தபடி பேசாத இதை யாராவது ஏமாற்றி உன்கிட்ட தள்ளி இருப்பாங்க என பேச அதற்கு ஸ்ருதி ஹோம் அப்ளையன்ஸ் விக்கிறீங்களே இதை பத்தி கொஞ்சம் கூட உங்களுக்கு தெரியாதா என கிழித்து தொங்க விடுகிறார் இதனால் மனோஜ் முகம் வாடுகிறது.

மேலும் ரவி எங்கள் ஹோட்டலில் பெஸ்ட் கப்புல் போட்டி நடக்க இருக்கிறது நான் மூணு ஃபார்ம் வாங்கி வந்துள்ளேன் நாம் அனைவரும் கலந்து கொள்ளலாம் என கூறுகிறார்கள். முதலில் அனைவரும் மறுக்க பிறகு ஒரு லட்சம் பிரைஸ் என கூறியவுடன்  கலந்து கொள்கிறார்கள். அப்பொழுது ரோகினி மனோஜ் அவர்களிடம் கேள்வி கேட்கும் பொழுது மனோஜ் ரோகினி என்கிட்ட எந்த ஒரு விஷயத்தையும் மறைத்தது கிடையாது எனக் கூறுகிறார் இதனால் ரோகிணி அதிர்ச்சி அடைந்து முகம் வாடுகிறது.

அடுத்ததாக ரவி சுருதி பேசும்பொழுது ரவி எங்க அப்பா அம்மாவுக்கு மூணு பசங்க அதே மாதிரி நானும் மூணு பசங்க பெத்துக்கணும் என கூறுகிறார் இதனால் சுருதி எழுந்து நின்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துகிறார். அடுத்ததாக முத்து மீனாவிடம் கேள்வி கேட்கும் பொழுது மீனா என்னுடைய அப்பா என்னை எப்படி பார்த்து கிட்டாரோ அதே மாதிரியே என்னுடைய கணவர் என்னை பார்த்துக் கொள்கிறார் என் கணவர் மட்டும் எனக்கு போதும் என்பது போல் பேசுகிறார் இதனால் அனைவரும் கைத்தட்டுகிறார்கள் உடனே முத்துமீனா தான் வின்னர் என அறிவிக்க இருக்கிறார்கள்.