ரோகிணியின் கடந்த கால வாழ்க்கையை ஆராய சொன்ன விஜயா.. சந்தேகப்படும் மனோஜ் .. கட்டிலை வைத்து மனோஜை அசிங்கப்படுத்திய சுருதி..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க விஜயா என்ன ஆச்சு எனக் கேட்கிறார், அதற்கு ரோகிணி திட்டியதை மனோஜ் தன்னுடைய அம்மாவிடம் கூறுகிறார் இதனால் விஜயா கோபப்பட்டு மனோஜ் உள்ளே அழைத்து சென்று ரோகிணியிடம் நீ கல்யாணத்துக்கு முன்னாடி குழந்தை பெத்திருக்க மாட்டேனு எப்படி நாங்க நம்புறது உன்ன பத்தி கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு தெரியாது என பேசுகிறார்.

என்ன அத்தை இப்படி பேசுறீங்க என கேட்க நீ மட்டும் பேசலாம் அது உனக்கு கோபத்தை உண்டு பண்ணதில்ல அதே மாதிரி தான் எனக்கும் கோவம் வருது என பதிலடி கொடுக்கிறார் விஜயா அந்த சமயத்தில் உன் பாஸ்ட் லைப் பத்தி எங்களுக்கு எதுவுமே தெரியாது என பேசுகிறார் இதனால் ரோகிணி இவங்களை இதுக்கு மேல பேச விட்டா சரி வராது என ஜீவா உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது உண்மைதானே அதனால் தான் கேள்வி கேட்கிறேன் என பேசுகிறார் ரோகிணி.

அது உண்மை இல்லை என்று சொல்லுங்கள் நான் கேட்க மாட்டேன் எனவும் பேசுகிறார் அதற்கு விஜயா ஏதேதோ  காரணம் சொல்லி மழுப்பி விட்டு வெளியே வருகிறார் பிறகு மனோஜ் என்னமா ஏதோ கேட்கிறேன் சொன்னிங்க கேட்கவே இல்லையே என கேட்க உன்னால தாண்டா எங்க பாத்தாலும் அசிங்கப்படுகிறேன் என மனோஜை திட்டுகிறார் விஜயா அது மட்டுமில்லாமல் ரோகிணி திடீரென கேட்பதால் சந்தேகம் வருகிறது அவளுடைய பாஸ்ட் லைப் பற்றி நமக்கு எதுவுமே தெரியாது. அதை விசாரிக்கணும் என பேசுகிறார்.

மற்றொரு காட்சியில் முத்து கட்டில் வாங்கி வந்துள்ளார் அதனைப் பார்த்து விஜயா இது எங்க போட முடியும் வெளிய எடுத்துட்டு போ என பேசுகிறார் அதற்கு அண்ணாமலை அவங்க ரெண்டு பேருக்கும் கட்டில் வாங்கி இருக்காங்க அதுல உனக்கு என்ன பிரச்சனை என பேசுகிறார் கட்டிலை நடு காலில் போடுகிறார்கள் இது பர்மா தேக்கு கண்டிப்பா இது கிடைக்கவே கிடைக்காது என முத்து சொல்ல அதற்கு அதற்கு மனோஜ் அப்படி எல்லாம் இல்ல இது டூப்ளிகேட்டா இருக்கும் என பேசுகிறார்.

மற்றொரு காட்சியில் ஆளாளுக்கு பேச விஜயா மீனாவை அசிங்கப்படுத்துகிறார் ரூம் கற்ற ரூம் கற்றாண்னு சொல்லி காலத்தை தள்ளி கொண்டு இருக்கிறீர்கள் எனவும் பேசுகிறார். கண்டிப்பா ஒரு நாள் நாங்க கட்டுவோம் என முத்து சவால் விடுகிறார். உடனே அவரவர்கள் வேலையை பார்க்க சென்று விடுகிறார்கள் அப்பொழுது சுறுதி வந்து புது கட்டில் இருக்கு பாத்தியா இது பர்மா தேக்குல செஞ்சது ரொம்ப காஸ்ட்லியான கட்டில் என கூறுகிறார் அப்பொழுது மனோஜ் மற்றும் ரோகினி வந்து இது சாதாரண கட்டில் தான் இதுக்கு ஏன் இவ்வளவு பில்டப் கொடுக்குற என கேட்கிறார்.

நீங்க ஹோம் அப்ளையன்ஸ் வச்சிருக்கீங்க இது கூட உங்களுக்கு தெரியலையா இது நல்ல குவாலிட்டியான பர்மா தேக்குல் செய்தது என கூறுகிறார் இப்படி கூறியதால் மனோஜ் அசிங்கப்பட்டு நிற்கிறார் பொய் சொல்றது பிராடு தானம் பண்றது நீ மட்டும் தான் நீ தான் 27 லட்சத்தை இன்னும் கொடுக்காம ஏமாத்திட்டு இருக்க என கேட்க ஆல்ரெடி 2 லட்சம் கொடுத்தாச்சு இன்னும் 16 லட்சம் தான் கொடுக்க வேண்டும் என கூறுகிறார் நீ இப்படி எல்லாம் பேச மாட்டியே இது உனக்கு யாரு சொல்லிக் கொடுத்தது என ரோகிணியை பார்க்கிறார் அவர் கேட்பதில் என்ன தப்பு இருக்கு என ரோகிணியும் பேசுகிறார்.

சுருதி மனோஜ் அசிங்கப்படுத்த உடனே ரோகினி சப்போர்ட்டுக்கு வருகிறார் அதற்கு மீனாவும் அவங்க சொன்னதுல என்ன தப்பு இருக்கு எனக்கு கேட்கிறார் உடனே ரவி எல்லாரும் வெயிட் பண்ணுங்க எங்க ஹோட்டலில் கப்பில்போட்டி நடக்கிறது அதற்கு மனோஜ் நாங்க தான் ஜெயிப்போம் நாங்க தான் உலகத்திலேயே சிறந்த கப்பில் எனக் கூறுகிறார் அதேபோல் முத்துவும் கூற உங்களுக்கு அதுல கேள்விக்கு பதிலே சொல்ல தெரியாது நீங்க எப்படி ஜெயிக்க முடியும் என பேசுகிறார் படிக்காததை அசிங்கப்படுத்துகிறார் உடனே மீனாவும் கோபப்படுகிறார் ரவி அந்த சமயத்தில் ஒரு லட்சம் பிரைஸ் என சொல்ல உடனே முத்துவும் மீனாவும் நாம கலந்து கொள்ளலாம் என பேசுகிறார்கள் இப்படி அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது.