குழந்தை பெத்துக்க முடியாதவன் ஆம்பளையா வம்பு இழுத்த அருண்.. முத்துவை அடித்த அண்ணாமலை..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷ் மனோஜ் புகைப்படத்தை வரைந்ததாக கூறி வீட்டில் உள்ள அனைவரிடமும் காட்டுகிறார்கள் அதற்கு விஜயா அந்தப் புகைப்படத்தை கிழித்து தூக்கிப் போடுகிறார். மற்றொரு காட்சியில் விஜயாவை அனைவரும் திட்டுகிறார்கள்.

மேலும் விஜய புகைப்படத்தை வரைவதாக கூறியதன் என்ன அச்சசல் பேய் மாதிரியே வரஞ்சிடுவியா என சுருதி கிண்டல் அடிக்கிறார் உடனே அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள். சும்மா கிண்டலுக்கு பேசினேன் என சொல்லி சமாளிக்கிறார். மேலும் அந்த சமயத்தில் இவன் பாட்டி இவன நைசா தள்ளிட்டு போயிட்டா என்ன திட்ட ரோகினி தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து கிரீஸ்சை விசாரிக்க கூறுகிறார் உடனே மீனாவுக்கு கால் செய்து கிரிசை பற்றி விசாரிக்கிறார்.

மற்றொரு பக்கம் அருண் சீதாவை அழைத்து ஹாஸ்பிடலுக்கு வருகிறார் அந்த சமயத்தில் முத்து நிற்க இமையாய் இங்கே வந்திருக்கான் என சீதாவிடம் கேட்கிறார். என்ன பாக்க தான் மாமா வந்திருப்பார் என கூறுகிறார். உடனே முத்து கிரிஷை தத்தெடுப்பது பற்றி சீதாவிடம் பேச நான் அக்காவிடம் பேசுகிறேன் என கூறுகிறார். உடனே மற்றொரு பக்கம் எப்படியாவது முத்துவை தத்தெடுக்க விடக்கூடாது என ரோகிணி பக்கா பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.

மீனாவை  அழைத்து சீதா பேசுகிறார் அதற்கு கரணம் சொல்லி அனுப்பிவிட்டு செல்கிறார் ஒரு வழியாக சீதாவுக்கு சந்தேகம் வருகிறது. இந்த நிலையில் அருண் மற்றும் அருனின் நண்பன் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது முத்து அருகில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அவர் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்து குழந்தை பெத்துக்க முடியாதவங்க எல்லாம் ஆம்பளையே கிடையாது ரெண்டு வருஷம் ஆகி இன்னும் குழந்தை பெத்துக்கலான அவனுக்கு ஏதோ பிரச்சனை என கண்டபடி பேசுகிறார்.

இதனால் கோபப்பட்ட முத்து அருனை  அடித்து துவைக்கிறார் அந்த வழியாக போன அண்ணாமலை முத்துவை என்ன காரியம் பண்ணிருக்க என அடிக்கிறார் இத்துடன் பிரமோ முடிகிறது.