அடுத்த ஜென்மத்தில் இப்படி பிறக்க வேண்டும் எனக் கூறிய SPB!! வைரலாகும் வீடியோ.!! வீடியோவை பார்த்து கதறும் ரசிகர்கள்.

0

Singer spb wish about his rebirth video: 90 காலகட்டத்தில் பிரபல பாடகராக வலம் வந்தவர் பாடகர் எஸ் பி பி. இவருடைய பாடல் இன்று வரையிலும் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் நேற்று பிற்பகல் எஸ் பி பி யின் உயிர் பிரிந்தது இவர் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கொரோனாவிடம் போராடி வெளிவந்து நல்ல நிலைமைக்கு வரும் நிலையில் இப்படி இறந்த செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தது என்று தான் கூற வேண்டும்.

சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் எஸ்பிபி பற்றிய பல செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது அந்த நிகழ்ச்சியை பிரபல நடிகை குஷ்பு அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.

அவ்வப்போது குஷ்பூ எஸ்பிபி இடம் அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் அதில் நீங்கள் பாடகராக பிறக்க ஆசைப் படுகிறீர்களா என்று கேட்டதற்கு எஸ்பிபி பெருத்த சந்தோஷத்துடன் உடனே ஆமாம் நான் பாடகராக ஆசைப்படுகிறேன் என்று சிரித்துக்கொண்டே பதில் கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் மீண்டும் பாடகராக பிறக்க வேண்டும் அதற்காக நாங்கள் கடவுளிடம் பிராத்தனை செய்கிறோம் என்று நெகிழ்ச்சியுடன் கூறிவருகிறார்கள். இதோ அந்த வீடியோ.