மகள் நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட உருக்கமான பதிவு!! காலம் அனைத்திற்கும் மருந்தாகாது.!!

0

Singer chitra on daughters memorial day: சின்னகுயில் சித்ரா என்றாலே தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அந்தவகையில் மிகவும் பிரபலமானவர். இவர் பின்னணி பாடகியாக தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஒரியா, வங்காளம் எனப் பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார். இவர் ஆறு இந்திய தேசிய புகைப்பட விருதுகளையும் மற்றும் ஆறு தடவை தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 15ஆண்டுகளுக்குப் பின்னர் நந்தனா எனும் பெண் குழந்தை பிறந்தார். 2011 ஏப்ரல் 14 அன்று துபாயில் உள்ள நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபத்தில் நந்தனா உயிரிழந்தார்.
இந்நிலையில் அவர்கள் தனது மகளின் நினைவு நாளை ஒட்டி உருக்கமான பதிவு ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதில் கூறியதாவது ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு காரணம் உண்டு, அந்த காரணம் முடிந்தால் அழியா உலகத்திற்கு செல்வோம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் காலம் ஒரு சிறந்த மருந்து என்றும் கூறுவார்கள். ஆனால் அது கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு தான் தெரியும். காயம் அழியாது வலி இருந்து கொண்டே தான் இருக்கும். உன்னை மிஸ் பண்ணுகிறேன் நந்தனா என்று அவர் அந்தப் பதிவில் கூறி உள்ளார். தற்போது அந்த பதிவு சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் பெரும் மன கஷ்டத்தில் உள்ளனர்.

இதோ அந்த பதிவு.

chitra
chitra