கொரோனா பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு 85 லட்சம் கொடுத்த பாடகி சின்மயி..!! குவியும் பாராட்டு.

0

singer chinmayi donates 85 lakhs to corona affected people: கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் வேலை இல்லாமல் சாப்பிடுவதற்கு கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பாடகி சின்மயி இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பாடல் அர்ப்பணிப்பு மூலம் நிறைவேற்றி வருகிறார்.

பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் பிறந்த நாள் மற்றும் திருமணங்கள் போன்ற நாட்களுக்கு வாழ்த்து பாடல் பாடுவதாக அறிவித்திருந்தார். அந்தப் பாடல் பாடுவதற்காக அவருக்கு வரும் பணத்தை நன்கொடையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

இதனை அறிந்த பலர் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் அவரது ரசிகர்கள் சின்மயிடம் பாடல்களைக் பாடுமாறு கேட்டு வாங்கினார். அவ்வாறு இவர் மூவாயிரம் பாடல்களை பாடி அதன் மூலம் 85 லட்சம் பணம் சம்பாதித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார். அதுமட்டுமல்லாமல் இதைத் தொடர்ந்து செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். இதை பார்த்த திரை பிரபலங்கள் ரசிகர்கள் மற்றும் சக பாடகர்கள் என அனைவரும் இவரை பாராட்டி வருகின்றனர்.

உண்மையில் இந்த செயல் பலருக்கு தூண்டுதலாகவும் வழிகாட்டியாகவும் உள்ளது. யாருக்கும் தோன்றாத இந்த சிந்தனை இவருக்கு தோன்றியது அதன் மூலம்  ஏழை மக்களுக்கு உதவி வருகிறார் என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.