மகளிடமும் சகோதிரியிடமும் ஆண்களால் உணர்ச்சியை கட்டுபடுத்த முடியாதா..? நயன்தாராவை வர்ணித்த நெட்டிசனை வெளுத்து வாங்கிய சின்மயி..!

0
nayan
nayan

சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பாடகி என்றால் அவர் சின்மயிதான் இவ்வாறு பிரபலமான நமது பாடகி சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பது மட்டுமில்லாமல் அவர் பேசும் ஒவ்வொரு பதிலும் சர்ச்சையில் முடிவது வழக்கமான செயல்தான்.

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் என்று ஒரே நிறுவனத்தை நடத்தி வருவது மட்டுமில்லாமல் அதன் மூலமாக பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருகிறார்கள் அந்த வகையில் அவளுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் காத்து வாக்குல இரண்டு காதல் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தார்கள் இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை அஸ்வின் அவர்கள் இயக்கியிருந்தார் மேலும் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்கில் வெளியான இந்த திரைப்படத்தை பார்க்க நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர்கள் ஜோடியாக வந்திருந்தார்கள்.

இவ்வாறு அவர்கள் கலந்து கொண்ட பொழுது அந்த ஷோவில் நயன்தாரா அணிந்து வந்த உடை பற்றியும் அவருடைய அழகு பற்றிய நெட்டிசன்கள் பலர் மிகவும் தரக்குறைவாகவும் மோசமாகவும் கமாண்ட் செய்து வந்தார்கள் மேலும் இதற்கு நயன்தாரா ரசிகர்கள் பல மிகப்பெரிய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து நயன்தாரா பற்றிய வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்த தனியார் ஊடகம் ஒன்று தரகுறைவாக கமெண்ட் செய்பவர்களை விட்டுவிட்டு அதை தட்டி கேட்க வந்த பாடகி சின்மயி பற்றி பல்வேறு கேள்வி எழுப்பி வருகிறார்கள் அந்த வகையில் நயன்தாரா குறித்து ஆபாசமான கமெண்ட் செய்து செருப்படி  கொடுக்கும் வகையில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்

அந்த வகையில் சின்மயி கூறியது என்னவென்றால் இது மாதிரி ஆண்கள் எல்லாம் தாய்ப்பால் குடித்து தான் வளர்ந்தார்களா இல்லையா என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று கூறியது மட்டும் இல்லாமல் இது போன்ற ஆண்களுக்கு பெண் குழந்தை இருந்தால் அது என்ன ஆகும் மேலும் கணவன்கள் முன்பும் மகன்கள் முன்பும் அம்மாக்கள் மகளை துப்பட்ட அணிய சொல்வது கிடையாது.

ஆனால் மகளிடமோ அல்லது சகோதரிகளிடமோ இது போன்ற உணர்ச்சிகளை ஆண்களால் கட்டுப்படுத்த முடியாதா என மிகவும் கேவலமாக பதிவினை வெளியிட்டுள்ளார்.