மாணவர்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லித் தரவும் பள்ளிக்கூடமே தற்பொழுது மிகவும் தரம் குறைந்து உள்ளது. அந்த வகையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்று தான் பிஎஸ்பிபி பள்ளி. இந்த பள்ளி சென்னையில் கேகே நகரில் உள்ளது.
இந்த பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவரின் மீது பாலியல் புகார் போடப்பட்டுள்ளது. அதாவது ராஜகோபாலன் என்ற வணிகவியல் ஆசிரியர் ஆன்லைன் கிளாஸில் மாணவிகளிடம் மிகவும் தவறான பல கேள்விகளை கேட்டு பெரும் சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளார்.
மிகவும் ஆபாசமாக பேசியதாகவும் ஆன்லைன் கிளாஸ் நடக்கும் பொழுது வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. எனவே இதில் சம்பந்தப்பட்ட மாணவிகள் இவரின் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்கள். அந்த வகையில் போலீசாரும் ராஜகோபாலனின் கைது செய்துள்ளார்கள்.
விசாரணையில் ராஜகோபால் கடந்த ஐந்து வருடங்களாக இப்படித்தான் மாணவிகளிடம் தொடர்ந்து நடந்து வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தப் பள்ளியின் உரிமையாளர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை மற்றும் ஓய்.ஜி.பார்த்தசாரதி ஆகியோர்களால் 1917-1990ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு உள்ளது.
பார்த்தசாரதியின் மறைவிற்கு பிறகு அவரது மனைவி ராஜலக்ஷ்மி பார்த்தசாரதி நடத்தி வந்துள்ளார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து இருவரும் இறந்ததால் தற்போது இவரின் குடும்பத்தினர்கள் psbb பள்ளியை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இப்பள்ளியை பலரும் விமர்சித்து வருகிறார்கள் மனோகரனின் மகன் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது 2012ஆம் ஆண்டு சும்மிங் புல்லில் விழுந்து இறந்தார். இதன் காரணமாக 5 பேரின் மீது வழக்கம் போடப்பட்டது தற்போது இதனைப் பற்றியும் பலர் பேசி வருகிறார்கள்.
Cast!! Cast!! Cast!!
Only Brahmins can study in this school?!
What kind of karumam pidicha ideology is this?! #psbbschool #PSBB pic.twitter.com/SNPbsAFcWH— சினிமாக்காரன் (@ImpriyanSpb) May 24, 2021
இப்படிப்பட்ட நிலையில் இப்பள்ளியை பற்றி விளம்பரம் செய்த பழைய வீடியோ ஒன்று தேடி கண்டுபிடிக்கப்பட்டு தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த விளம்பரத்தில் நடித்து இருக்கும் பெண் வேறு யாருமில்லை பிரபல இசையமைப்பாளரான அனிருத்தின் அக்கா வைஷ்ணவி தான். அனிருத் குடும்பத்தினர் மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் குடும்பமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.