யாரு செத்தாலும் தண்ணிய போட்டுகிட்டு ஜாலியா இருப்பாரு.! வடிவேலுவின் உண்மையான முகத்திரையை கிழித்த நடிகர்…

vadivelu : நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் காமெடிக்காகவே வெற்றி பெற்றுள்ளன அதேபோல் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் வடிவேலு இருந்தால் போதும் மினிமம் அந்த திரைப்படம் ஓடிவிடும் என்ற எண்ணம் அனைவரின் மனதில் இருந்தது.

ஆனால் சமீப காலமாக கிட்டத்தட்ட 10 வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் வடிவேலு அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன இவர் ராஜ்கரன் மூலம் தான் சினிமாவில் நுழைந்தார் 90 காலகட்டத்தில் வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருந்தார் அதன் பிறகு 2000 ஆண்டு தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டார்.

வடிவேலு வெற்றிக்கு முழு காரணம் அவர் யாரையும் தாழ்த்தி பேசாமல் தன்னையே தாழ்த்திப் பேசி காமெடி செய்து கொள்வார் அதுதான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஒரு காலகட்டத்தில் பெரிய ஹீரோ சின்ன ஹீரோ என வடிவேலு கால் சீட் கிடைப்பதற்கு எதிர்பார்ப்புகள் அதிகமானது.

இந்த நிலையில்  விஜயகாந்த் உறவினர் வீடு வடிவேலுவின் அலுவலகமும் அருகருகே அமர்ந்து இருந்தது அப்பொழுது விஜயகாந்தின் உறவினரை பார்க்க வந்தவர்கள் தங்களது காரை வடிவேலு அலுவலகத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தி விட்டார்கள் அதனால் அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார் வடிவேலு அந்த பேச்சு மிகவும் பிரபலமான பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வடிவேலு விஜயகாந்த் மீது கடும் விமர்சனங்களை வைத்தார் அது மட்டும் இல்லாமல் அரசியல் விமர்சனத்தின் பொழுது விஜயகாந்த் மோசமாக விமர்சித்ததால் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டார் கடைசியாக ஒரு திரைப்படத்தில் கூட நடிப்பதற்கு இவரை யாருமே அணுகவில்லை.

சந்திரமுகி இரண்டாவது படத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து மாமன்னன் திரைப்படத்திலும் நடித்திருந்தார் தற்பொழுது பகத் பாஸில் உடன் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். வடிவேலு குறித்து பல நடிகர்கள் பல மேடைகளில் பேசி உள்ளார்கள் அதிலும் வடிவேலு பற்றி பலரும் விமர்சனத்தை வைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் சிங்கமுத்து சமீபத்தில் ஒரு பேட்டியில் வடிவேலு குறித்து பேசி உள்ளார் அதாவது வடிவேலு காமெடிக்கு ஐடியாவாக இருந்தவர் சிங்கமுத்து இந்த நிலையில் விஜயகாந்த் இறப்பிற்கு வராத வடிவேலு இறுதி அஞ்சலி கூட செலுத்தவில்லை இரங்கலும் தெரிவிக்கவில்லை.

விஜயகாந்த் மட்டுமல்லாமல் அல்வா வாசு, போண்டாமணி, என யார் இறப்புக்கும் வடிவேலு செல்வதே கிடையாது அதே சமயம் கலைஞர் 100 விழாவுக்கு மட்டும் வந்திருந்தார். இந்த நிலையில் சிங்கமுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பற்றி பேசியிருந்தார் அப்பொழுது வடிவேலுவின் பாடி லாங்குவேஜ் அவர் கை கொடுத்தது அவர் இவ்வளவு சொத்து சேர்த்ததற்கு காரணம் நானும் ஒன்று ஆனால் ஏழு கோடி ரூபாயை காணவில்லை என்று சொல்லிவிட்டார் எனக்கு எதுவென்றே தெரியாது சொத்து வாங்கியதில் இருந்து அவருக்கு பாஸ்போர்ட் எடுத்த வரை உதவி செய்திருக்கிறேன் இவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறார் நிம்மதியாக இறந்து விடுவாரா அவர் அப்பாவி மாதிரி நடித்தால் மக்களுக்கு பிடித்திருந்தது ஆனால் தற்பொழுது உண்மை முகம் தெரிந்து விட்டது.

அதாவது ஒரு மனிதன் நல்ல குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும் அல்லது நல்ல புத்தகங்களை படித்திருக்க வேண்டும் அல்லது நல்ல நண்பர்களையாவது சம்பாதிக்க வேண்டும் இது மூன்றுமே அவருக்கு கிடையாது விஜயகாந்த் மனோபாலா மயில்சாமி என யாருடைய இறப்புக்கும் வடிவேலு வந்ததே கிடையாது அவர் வர மாட்டார் என்பது எனக்கு தெரியும் யாராவது இறந்துவிட்டால் ஊரில் இருக்க மாட்டார் செத்துவிட்டால் தண்ணியை போட்டுட்டு ரொம்ப சந்தோஷப்படுவார் அவருடைய ஜாதகப்படி சொல்றேன் அடுத்த வருஷம் இவருக்கு தெரியும் நான் சொல்றதை பொய் என்று கூட சொல்லலாம் இந்த சமூகத்துக்கு மக்களுக்கும் மிகப்பெரிய வில்லனை வடிவேலு தான் எனக் கூறியுள்ளார்.