சிங்க பெண்ணே பாடலில் வரும் இவர் யார் தெரியுமா.? அட இந்த நடிகைதானாம்பா இதோ அவரே கூறிவிட்டாரே

0

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னன்களில் ஒருவர் விஜய் இவர் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

படத்தில் விஜய் கால்பந்து கோச்சராக நடித்துள்ளார், இந்த நிலையில் நேற்று ஏ ஆர் ரகுமான் இசையமைத்த சிங்க பெண்ணே பாடல் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று யூடியூபில் சில சாதனைகளைப் படைத்தது.

மேலும் சிங்க பெண்ணே பாடலில் ஒரு காட்சியில் வரும் பெண் யாரென்று  தகவல் வெளியாகியுள்ளது, அவர் வேறு யாரும் இல்லை 96 படத்தில் நடித்த வர்ஷா பொல்லமா தானம் இதை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.