சிந்துபாத் திரைவிமர்சனம்.!

0
vijay sethupathi sindhupath
vijay sethupathi sindhupath

எஸ்.யூ அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சிந்து பாத், இந்த படம் எப்படி இருக்குனு பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

தென் தமிழ் நாட்டில் ஒரு ஊரில் வசித்து வரும் விஜய் சேதுபதி தன்னுடைய உடன் பிறவா சகோதரனான சூப்பரும் (சூர்யா விஜய் சேதுபதி ) சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வருகிறார்.

விஜய் சேதுபதிக்கு எதையும் சத்தமாக பேசினால் தான் காது கேட்கும். அதே போல் இப்படத்தின் நாயகியான அஞ்சலி எதையும் சத்தமாக தான் பேசுவார், அவருடைய தொண்டை பிரச்னைனால் மெதுவாக பேச முடியாது.

மலேசியாவில் வேலை பார்க்கும் அஞ்சலி லீவுக்கு சொந்த ஊருவுக்கு ( விஜய் சேதுபதியின் ஊரு ) வருகிறார். அப்போது அஞ்சலி மீது காதல் கொள்ளும் விஜய் சேதுபதி அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். முதலில் காதலை மறுக்கும் அஞ்சலி பிறகு ஓகே சொல்லி விடுகிறார்.

இவர்களின் காதலுக்கு அஞ்சலின் அக்கா புருஷன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் அந்த எதிர்ப்புகளை தாண்டி அஞ்சலி மீண்டும் மலேசியாவுக்கு திரும்பி செல்லும் போது ஏர் போர்டிலேயே வைத்து தாலி கட்டி விடுகிறார்.

திருமணத்திற்கு பிறகு கட்டிய தாலியுடன் மலேசியா செல்லும் அஞ்சலி அங்கு ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்கிறார். அந்த விசியம் தெரிந்த விஜய் சேதுபதியும் சூர்யாவும் மலேசியா சென்று அங்கு அவர் ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

படத்தை பற்றிய அலசல் :

விஜய் சேதுபதியும், அஞ்சலியும் வழக்கம் போல திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். விஜய் சேதுபதியின் மகன் சூரியாவும் சூப்பரான நடிப்பை கொடுத்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பட்டய கிளப்புகிறது. பின்னணி இசையும் பிரமாதமாக அமைந்துள்ளன.

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது, வித்தியாச வித்தியாசமான லொகேஷன்கள் கண்களை கவர்கின்றன.

ரூபனின் எடிட்டிங் வழக்கம் போல் சூப்பராக அமைந்துள்ளது.

பழைய கதையாக இருந்தாலும் வித்தியாசமாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் அருண் குமார். மாஸ் ஹீரோ படம் என்பதால் லாஜிக்கை எல்லாம் தூரம் வைத்து விட்டு சில தவறுகளை செய்துள்ளார்.

பிடித்தது :

விஜய் சேதுபதி, அஞ்சலியின் நடிப்பு, ஒளிப்பதிவு,  இசை

படத்தில் சொதப்பியது :

பழைய கதை ஆனால் வித்தியாசமான திரைக்கதை,  மாஸ் ஹீரோ படம் என்றாலும் லாஜிக் மீறல்கள் எல்லாம் ஓவர்.

சிந்துபாத் : 3/5