ஒரே ஒரு பாடல் மூலம் மீண்டும் பிரபலமடைந்த நடிகை சிம்ரன்.! வைரலாகும் வீடியோ

90 காலகட்டங்களில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து திரை துறையின் உச்சத்தை அடைந்தவர் சிம்ரன் அவர்கள் அஜித், விஜய், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்காதது சற்று மனவருத்தம் இருந்தது என சிம்ரன் அவர்கள் பல ஊடகங்களில் கூறி உள்ளார்.

இந்தநிலையில் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் ரஜினியுடன் பேட்ட படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பை வழங்கினார் இதன் மூலம் தனது கனவு நிறைவேறி உள்ளதாக அவர் கூறியுள்ளார் தற்பொழுது அவர் சோசியல் மீடியாக்களில் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.

தற்பொழுது அவர்  டிக் டாக்கில் தனது மகனுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.இதை தொடர்ந்து அவர் புதிதாக யூடியூப் ஒன்றை சிம்ரன் அண்ட் சான்ஸ் பிலிம்ஸ் என்ற பெயரில் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் காதலர் தினத்தன்று, ஹிந்தி மொழியில் உருவாகியுள்ள அழகிய காதல் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இதனை தனது யூடியூப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார் இதனை பல லட்சம் பேர் பார்த்து உள்ளனர்.சிம்ரன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Comment