சிம்ரன் டிக் டாக் வந்ததும் முதன்முதலாக வெளியிட்ட வீடியோவை பார்த்தீர்களா.!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாகவும் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் சிம்ரன். இவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தின் மூலம் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவரின் ரீ-என்ட்ரி இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இருந்தது, தற்பொழுது இவர் மாதவன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் இந்த நிலையில் டுவிட்டர் ஃபேஸ்புக் போன்றவற்றில் ஆக்டிவாக இருக்கும் சிம்ரன் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்தான்.

இவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சிம்ரனா இது இவ்வளவு இளமையாக இருக்கிறார் என பலரும் கேள்வி கேட்டார்கள் இந்த நிலையில் சிம்ரன் டிக் டாக் ஆப்பிலும் கால் தடம் பதித்துள்ளார், டிக்டாக் வந்ததும் தனது மகன்களுடன் முதல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Leave a Comment