46 வயதிலும் இளம் நடிகைகளை பொறாமை பட வைக்கும் சிம்ரன்.! வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் கொஞ்சம் கூட மாறல எனக்கூறும் ரசிகர்கள்.

0
simran
simran

நடிகை சிம்ரன் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தில் விஜய்யுடன் நடிக்க ஆரம்பித்தார். தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அதன் பிறகு நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினால், அவள் வருவாளா, வாலி ,ஜோடி பிரியமானவளே என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மேலும் 2002 ஆம் ஆண்டு கமலஹாசன் உடன் இணைந்து பஞ்சதந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு மிகப்பெரிய  வரவேற்பு கிடைத்தது 2003 ஆம் ஆண்டு தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை அதன் பிறகு குணசத்திர வேடத்திலும்  முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.

அந்த வகையில் சிம்ரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொண்டு நடித்து வரும் சிம்ரன் சமூக வலைதளத்திலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி புகைப்படம் மற்றும் தனது வாழ்க்கையில் நடக்கும் சந்தோஷத்தை சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சிம்ரன் அவர்களுக்கு 46 வயதாகிறது இவர் தற்பொழுது புதிதாக போட்டோ சூட் ஒன்று நடத்தி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பறக்கவிட்டுள்ளார் அதாவது இளம் நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் போட்டோ சூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள் தற்பொழுது அந்த யுக்தியை சிம்ரன் அவர்களும் கடைபிடித்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளம் நடிகைகளை பொறாமை பட வைத்துள்ளது ஏனென்றால் அந்த அளவு இளமையான தோட்டத்துடன் இவர் புகைப்படத்தில் காட்சியளிக்கிறார். இதோ அந்த புகைப்படம்.

simran
simran