பல வருடங்கள் நடித்தும் சிம்ரன் ஜோதிகாவிற்கு தேசிய விருது கிடைக்கவில்லை.! காரணம் என்ன தெரியுமா.?

பெரும்பாலும் சினிமாவில் ஒரு நடிகை மிகவும் அழகாக இருக்கும் வரை மட்டுமே அவர்கள் தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகைகளாக நடிக்க முடியும். அதன்பிறகு இளமைப்பருவம் குறைந்ததும் பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது.இந்நிலையில் ஒரு சில நடிகைகள் குணச்சித்திர நடிகையாகவும்,  குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடித்து வருவார்கள்.

அந்தவகையில் ஒரு காலகட்டத்தில் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் வெகுவாக கவர்ந்த நடிகைகள் ஜோதிகா, சிம்ரன். இவர்கள் இருவரும் நடித்த காலகட்டத்தில் சினிமாவில் கலக்கி வந்தார்கள். அந்த வகையில் ஜோதிகா இடுப்பழகி என்றும் சிம்ரன் தொடையழகி என்றும் ரசிகர்களால்  அழைக்கப்பட்டார்கள்.

இப்படிப்பட்ட இவர்களுக்கு பல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு தேசிய விருது கூட கிடைக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பார்ப்போம்.  அந்த வகையில் ஜோதிகா மற்றும் சிம்ரன் இருவருமே 100 திரைப் படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்கள்.

இதில் ஒரு சில திரைப்படங்கள் தோல்வியடைந்து இருக்கலாம் ஆனால் இவர்கள் அடிக்கும் ஏதாவது ஒரு திரைப்படத்தில் தனது முழுத் நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருப்பார்கள்.

அந்த வகையில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. சிம்ரன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் கோவில்பட்டி வரலட்சுமி. இந்த இரண்டு திரைப்படங்களும் அவர்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கிடைக்கவில்லை இதற்கு முக்கிய காரணம் இவர்கள் டப்பிங் செய்வதில்லை இதனாலேயே இவர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இவர்களுக்கு என்று எந்த ஒரு தேசிய விருதும் கிடைக்கவில்லை.

Leave a Comment

Exit mobile version