Abbas : இடுப்பழகி என்றால் நாம் நினைவிற்கு வரும் முதல் பெயர் சிம்ரன் தான் 90 காலகட்டங்களில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து பிரபலமடைந்தார் ஒரு கட்டத்தில் கிளாமரையும் காட்டி ரசிகர்களையும் வளைத்து போட்டார் இப்படிபட்ட சிமரன் டாப் நடிகர்களுடன் நடிக்கும் போது கிசுகிசுகப்பட்டார்.
அப்படி தான் நடிகர் அப்பாஸ் உடன் சேர்த்து நடிக்கும் போது காதலிப்பதாக ஒரு கிசு கிசு கிளம்பியது. முதலில் இருவரும் சேர்ந்து “விஐபி” என்ற படத்தில் நடித்தனர் அப்பொழுது அப்பாஸ் சிம்ரன் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில வதந்திகள் வந்தது அதனை தொடர்ந்து “பூச்சூடவா” படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்த நீடித்தனர்.
இந்த படத்தில் இவருடைய கெமிஸ்ட்ரி சிறப்பாக இருந்தது மேலும் இவ்விருவரையும் பற்றி பல கிசுகிசுக்கள் எழுந்தன. அதன் பிறகு சிம்ரனின் வளர்ச்சியை அமோகமாக இருந்ததால் தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் படம் பண்ணினார் அதன் பிறகு அப்பாசுடன் படம் பண்ணவே இல்லை..
இதனால் அப்பாஸின் காதலை சிம்ரன் முறித்து விட்டதாகவும் ஒரு தகவல்கள் எல்லாம் வெளிவந்தன. இது குறித்து நடிகர் அப்பாஸிடம் அண்மையில் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த அப்பாஸ்.. சிம்ரனுக்கும், எனக்கும் காதல் எல்லாம் இல்லை.. சிம்ரன் எனக்கு நல்ல நண்பர் ஸ்கிரீனில் நல்ல ஜோடியாக நடித்தோம். அதிக படம் பண்ண வில்லை.
சிம்ரனுடன் தமிழில் இரண்டு படம், தெலுங்கில் ஒரு படம் பண்ணினேன் நல்ல கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடிக்கும் இப்ப கூட நான் அவரிடம் பேசி வருகிறேன் என்று தெரிவித்தார் இதன் மூலம் பல வருட வதந்திக்கு அப்பாஸ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.