இளசுகளை வாட்டி வதைத்த சிம்ரனின் 5 கவர்ச்சி நடனங்கள்.! இன்றும் இந்த நடனங்கள் ரசிகர்களின் ஃபேவரட் தான்

இன்று வரையிலும் விஜய்க்கு நிகராக நடனம் ஆடக்கூடிய பெண் நடிகை என்றால் அது சிம்ரன் தான் என்று பெயர் பெற்றுள்ளார். ஒரு காலகட்டத்தில் தனது கவர்ச்சி நடனத்தால் பல ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருந்தார் அப்படி சிம்ரன் கவர்ச்சியாக நடனமாடிய 5 திரைப்படத்தில் அமைந்துள்ள பாடல்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

எதிரும் புதிரும் :- இயக்குனர் தரணி இயக்கத்தில் வெளியான எதிரும் புதிரும் என்ற திரைப்படத்தில் சிம்ரன் அவர்கள் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடி இருப்பார். இந்தப் பாடல் தற்போதும் ரசிகர்கள்  சமூக வலைதளங்களில் தேடிப் பார்க்கிறார்கள்.

வாலி:- அஜித் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்த வாலி திரைப்படத்தில் நிலவை கொண்டு வா என்ற பாடலுக்கு சிம்ரன் நடனம் ஆடி இருப்பார். இந்த பாடலை தேவா அவர்கள் இசையில் வைரமுத்து  வரிகளில் அமைந்துள்ளது இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

அவள் வருவாளா:- அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் அவள் வருவாளா. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சேலையில வீடு கட்டவா அஜித்தும் சிம்ரன் சேர்ந்து நடனமாடியிருப்பார்கள். இன்று வரையிலும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

பூச்சூடவா:- அப்பாஸ் சிம்ரன் நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் தான் பூச்சூடவா. இந்த படத்தில் அமைந்துள்ள காதல் காதல் காதல் காதல் என் கண்ணில் மோதல் என்ற பாடலுக்கு சிம்ரன் அவர்கள் கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார்.

நியூ:- எஸ் ஜே சூர்யா இயக்கி நடித்த திரைப்படம் தான் நியூ. இந்த படத்தில் அமைந்துள்ள சக்கர இனிக்கிற சக்கர என்ற பாடலுக்கு சிம்ரன் மற்றும் எஸ் ஜே சூர்யா  இருவரும் சேர்ந்து கவர்ச்சி நடனம் ஆடி உள்ளனர். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு பெற்றது.

Leave a Comment