வசூலில் புதிய உச்சத்தைக் கண்ட சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” – 4 நாட்கள் முடிவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

நடிகர் சிம்பு  அண்மைக்காலமாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த வகையில் இப்போ கௌதமனனுடன் மீண்டும் ஒரு முறை கைகோர்த்து சிம்பு நடித்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கௌதம மேனனும்,  சிம்புவும் இதுவரை கை கொடுத்த படங்கள் அனைத்துமே..

வெற்றி படங்கள் தான் அந்த வரிசையில் இந்த படமும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஒரு வழியாக படம் திரையரங்குகளில் வெளியாகியது. ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட படம் சற்று வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்துப் போனது மேலும் படத்தை பார்த்த பலரும் நல்ல விமர்சனத்தையே ஆரம்பத்திலேயே கொடுக்க ஆரம்பித்தனர்..

இதனால் இந்தப் படத்தை ரசிகர்கள் தாண்டி மக்களும் பார்க்க திரையரங்கை நாடி வருகின்றனர். அதன் காரணமாக தற்போது வசூலும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. வெந்து தணிந்தது காடு படம் முழுக்க முழுக்க ஒரு கிளாஸ்ஸான படமாக இருந்தது இந்த படத்தில் சிம்பு 22 கிலோ உடல் எடையை குறைத்து சின்ன பையன்னாக நடித்துள்ளது..

அனைவரையும் கவர்ந்திழுத்தது மற்ற நடிகர், நடிகைகளையும் சும்மா சொல்லிவிடக்கூடாதுகுறிப்பாக ராதிகா சரத்குமார், kayadu lohar, neeraj madhav மற்றும் பலர் சூப்பராக நடித்திருந்தனர். படம் தொடர்ந்து நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் வெந்து தணிந்தது காடு  படம் நான்கு நாட்கள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்க்கையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் நான்கு நாட்களில் 48 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என படக்குழு கணித்துள்ளது. இதனால் சிம்பு மற்றும் சிம்பு ரசிகர்கள் இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர் மேலும் மாநாடு போல இந்த படமும் சிம்புவுக்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறுவதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை என புரியும் வருகின்றனர்.

Leave a Comment