சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படம் முதல் நாளில் இத்தனை கோடியை வசூலிக்குமாம்.? மிரண்டுப்போன தமிழ் சினிமா..!

குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து பின் ஒரு கட்டத்தில் ஹீரோவாக சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தவர் சிம்பு. இவர் தொடர்ந்து காதல் செண்டிமெண்ட் படங்களில் நடித்து வெற்றியை ருசித்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் இவருக்கு பிரச்சனை மேல் பிரச்சனை ஏற்பட்டது.

அதோடு சிம்பு க்ளோஸ் என பலரும் எதிர்பார்த்தனர் ஆனால் புதிய அவதாரம் எடுத்து தொடர்ந்து தற்பொழுது படங்களில் நடித்து வருகிறார் இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள் வரிசையில் இடம் பிடிக்கின்றன. அந்த வகையில் மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கி உள்ளார் சிம்பு இந்த படத்திற்காக ரொம்பவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார் குறிப்பாக உடல் எடையை குறைத்தும் ஏற்றியும் நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களையும் தாண்டி சினிமா வட்டாரங்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

இந்த படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து siddhi idnani, kayadu lohar, ராதிகா சரத்குமார், neeraj madhav மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர். படம் நாளை கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது முதல் ஷோ 5 மணிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விநியோகஸ்தர்கள் வெந்து தணிந்தது காடு திரைப்படம்..

முதல் நாளில் எவ்வளவு வசூல் அள்ளும் என கணக்கு போட்டுள்ளனர் அதன்படி பார்க்கையில் குறைந்தது 15 கோடி வசூலிக்கும் என கூறப்படுகிறது. சிம்பு கடைசியாக நடித்த மாநாடு படம் முதல் நாளில் 10 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது அதைவிட இந்த படம் அதிகமாக வசூல் அள்ளும் என நம்பப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு வொர்க் அவுட் ஆகும் என்பது தெரியவில்லை.

Leave a Comment