சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படம் – ஒட்டு மொத்தமாக அள்ளிய வசூல் இத்தனை கோடியா.?

0
simbu
simbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு இவர் சமீப காலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்த நடிப்பதால் அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக மாறுகின்றன அந்த வகையில் மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் நடித்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்தப் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கினார். ஐசரி கணேஷ் இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்தார்.

கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த படம் கோலாகலமாக ரிலீசானது படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று ஆரம்பத்திலேயே நல்ல வசூல் வேட்டையும் நடத்தியது தொடர்ந்து சூப்பராக ஓடியதால் படக்குழு கேக் வெட்டி வெற்றியை கொண்டாடியது மேலும் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு புல்லட் ஒன்றை பரிசாக வழங்கினார். இந்த படத்தில் நடித்த நடிகர் சிம்புவுக்கு பரிசாக மிகப்பெரிய ஒரு சொகுசு காரை கொடுத்தார்.

இந்த படத்தை மிகப்பெரிய அளவில் பிரமோஷன் செய்ததற்காக கூல் சுரேஷுக்கு ஐபோனை பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர். இப்படி இருக்கின்ற நிலையில் வெந்து தணிந்தது காடு படத்திற்காக  முழு வரவு செலவு ரிப்போர்ட் தற்போது கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் இந்த படத்தின் பிரமோஷனுக்காக 35 கோடி மற்றும் படத்திற்கான பப்ளிசிட்டிக்கு மட்டும் இரண்டு கோடி டிஸ்ட்ரிபியூஷன் செய்வதற்காக ஒரு கோடியும் இன்டரஸ்ட்காக 4 கோடியும் ஆக மொத்தம் படம் உருவதற்காக 42 கோடி தனிப்பட்ட முறையில் செலவாகி உள்ளது.

இது தவிர படத்தில் நடித்த சிம்புவுக்கு 8 கோடி படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கு 8 கோடியும் வாங்கி உள்ளார். மற்றபடி ஏ ஆர் ரகுமானுக்கு 4 கோடி திரைக்கதை எழுத்தாளர் ஜெயமோகனுக்கு 30 லட்சம் படத்தின் கதாநாயகிக்கு 30 லட்சம். இதைத் தவிர மற்ற நடிகர், நடிகைகளுக்கு ஒரு கோடியே 40 ஆயிரத்தை சம்பளமாக கொடுத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் நடிகர்களுக்காக மட்டுமே 22 கோடி செலவாகி உள்ளது படம் பிசினஸ் ஆனது 11.60 கோடி படத்தை ரீமேக் செய்யும் உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட்ஸ்  மூவிஸ் கமிஷனாக 93 லட்சம் கொடுக்கப்பட்டது இவ்வாறு கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ஒட்டு மொத்தமாக 60 கோடி வசூலை பாக்ஸ் ஆபிஸில் குவித்து இருக்கிறது. மேலும் திரையரங்குகளில் வெளிவந்து படத்திற்கு மக்களின் ஆதரவு குறைவாக இருந்தாலும் சேட்லைட், டிஜிட்டல், ஆடியோ, ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் மூலமாக 20 கோடி லாபத்தை தயாரிப்பாளருக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.