திரைக்கு வந்த வேகத்திலேயே OTTயில் வெளியாகும் சிம்புவின் பத்து தல.! எப்பொழுது தெரியுமா.?

நடிகர் சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து விட்டது இயக்குனர் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் தந்துவிட்டார்கள் என்றே கூறலாம்.

மேலும் சிம்பு நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாததால் தற்பொழுது தனது உடல் எடையை முழுமையாக குறைத்து பல படங்களில் நடித்து வருகிறார்.தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 500 திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தின் வசூல் படத்தின் பட்ஜெட்டை விட கொஞ்சம் அதிகமாக வசூல் செய்துவிட்டதாம்.

சிம்பு நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களையும் இவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு பல விஷயங்களை ரசிகர்களுக்கு கூறினார்.

அப்பொழுது சிம்பு தனது உடல் எடையை குறைத்ததை பற்றியும் ரசிகர்களுக்கு தெரிவித்த நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் OTT ரிலீஸ் எப்பொழுது என ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதாவது பத்து தல திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 27ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாக இருக்கிறதாம்.

simbu
simbu

இதனைத்தொடர்ந்து பார்த்தால் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் தற்பொழுது கொண்டாட்டத்தில் குதித்து வருவது மட்டுமல்லாமல் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ஒரு சில முக்கிய திரைப்படங்களைப் பற்றியும் அப்டேட் வெளியிடுங்கள் எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment