சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் – முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

திறமையான பிரபலங்கள் ஒரு படத்தில் இணையும்போது அந்த படம் ஆட்டோமேட்டிக்காக வெற்றி படமாக அமைந்து விடும் அந்த வகையில் நடிகர் சிம்பு, கௌதமேனன் மற்றும் ஏ ஆர் ரகுமான் ஆகிய மூவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றி உள்ளார் அந்த படம் தான் வெந்து தணிந்தது காடு.

இந்த படம் நேற்று கோலாகலமாக திரையரங்கில் வெளியானது முதல் ஷோ 5:30 மணிக்கு வெளியிடப்பட்டது. படத்தை ரசிகர்களையும் தாண்டி மக்களும் பார்த்து கொண்டாடி  வருகின்றனர். மேலும் தொடர்ந்து படத்துக்கு நல்ல விமர்சனமே கிடைத்த வண்ணமே இருக்கிறது இதனால் படக்குழு சரி, சிம்புவும் சரி முதல் நாளே சந்தோஷமடைந்தனர்.

படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது மேலும் சிம்புவின் நடிப்பு அபாரம் என சொல்லி வருகின்றனர் அதுவும் இந்த படத்திற்காக சிம்பு 22 கிலோ உடல் எடையை குறைத்து 18 வயது பையனாக நடித்துள்ளது படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளது. சிம்புவுடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார்,kayadu lohar, neeraj madhav, siddhi idnani மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அவர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்துள்ளனர் இந்த படம் தொடர்ந்து பாசிட்டிவாக ஓடிக் கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவலும் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் முதல் நாளில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் சுமார் 15 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகின்ற நாட்களில் இந்த படம் இன்னமும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என கருதப்படுகிறது இதனால் படகுழு தற்போது செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது. மேலும் மாநாடு திரைப்படம் போல வெந்து தணிந்தது காடு திரைப்படம் 100 கோடி களப்பில் இணையும் என பலரும் சொல்லி வருகின்றனர்.

Leave a Comment