பல புது விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தது சிம்பு தான் – பழைய நினைவுகளை பகிரும் விக்னேஷ் சிவன்.!

simbu-and-vignesh
simbu-and-vignesh

இயக்குனர் விக்னேஷ் சிவன் 2012 ஆம் ஆண்டு சிம்பு வரலட்சுமி சரத்குமார் ஆகியோரை வைத்து உருவாக்கிய திரைப்படம்தான் போடா போடி முதல் படமே அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது இந்த படம் முழுக்க முழுக்க காமெடி காதல் கலந்த திரைப்படமாக இருந்ததால் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது.

அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவானது நானும் ரௌடி தான் திரைப்படம். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு காமெடியும் அனைவரையும் சிரிக்க வைத்தது அதனால் இந்த திரைப்படம் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது.

இதனால் இந்த திரைப்படம் அதிக நாட்கள் ஓடியது ஒரு நல்ல வசூலை பெற்று தந்தது இதனை தொடர்ந்து டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார். அண்மையில் கூட விஜய் சேதுபதியை வைத்து மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

அதனை தொடர்ந்து அஜித்தை வைத்து ஒரு புதிய படத்தை எடுக்க ரெடியாக இருக்கிறார் இப்படி நாளுக்கு நாள் இவரது வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அதற்கு ஏற்றார்போல இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் தற்போது வலம் வருகிறார் சினிமா உலகில் இவர் பாடலாசிரியராக மாறுவதற்கு முக்கிய காரணம் யார் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார்.

அதாவது அவர் கூறுகையில் சிம்பு ஏற்கனவே கதை எழுதுபவர், பாடலும் பாடுவார், மியூசிக் அப்படி ஒரு தடவை நான் ஒரு பாட்டுக்காக வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது சிம்பு அதை வாங்கி பார்த்தார் இந்த இடத்தில இப்படி போடு இப்படி எழுது என பக்கத்துல வந்து சொன்னார்.

அந்த ஒரு தூண்டுகோல் தான் நான் இந்த அளவுக்கு இப்படி ஒரு பாடலாசிரியராக வந்து நிற்க காரணம் இப்படி என்னை ஒரு தடவை தூக்கிவிட மற்றொருவர் வேண்டும் எனக்கு அந்த நேரத்தில் சிம்பு இருந்தார் என்பது போல விக்னேஷ் சிவன் சொல்லி உள்ளார்.