மறைமுகமாக சிக்னல் கொடுத்த சிம்பு.! சூப்பர் ஸ்டார் ஃபர்ஸ்ட் நெக்ஸ்ட் தான் சிம்பு நெல்சன் அதிரடி.!

தமிழ் சினிமாவில் சிறு வயதில் இருந்து நடித்து பிரபலமானவர் நடிகர் சிம்பு. அதனைத் தொடர்ந்து கதாநாயகனாக தற்போது வரைக்கும் முன்னணி நடிகராக நிலைத்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சிம்பு அவர்கள் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது பத்து தலை திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. இதனை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிம்பு அவர்கள் கொரோனா குமார்  திரைப்படத்திலும் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

இதனிடையே நடிகர் சிம்பு அவர்கள் இயக்கி ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. பத்து தலை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கொரோனா குமார் விண்ணைத்தாண்டி வருவாயா 2  திரைப்படங்களில் எந்த திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது தானே இயக்கி ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது 2016 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்து வந்த திரைப்படம் வேட்டை மன்னன் இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெய், சந்தனம், ஆகியோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த படத்திற்கு பட்ஜெட் இல்லாத காரணத்தால் பாதியில் நிறுத்தப்பட்டது.ஆனால் இந்த படம் வெளியாகி இருந்தால் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் அவர்களுக்கு முதல் படமாக அமைந்திருக்கும் ஆனால் இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் அடுத்த படத்தை இயக்க தயாராக இருந்தார்.

அப்படி இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதல் படமாக வெளியான திரைப்படம் டாக்டர் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்து வெளியாகி இருந்தது. இந்த நிலையில் மறுபடியும் வேட்டை மன்னன் திரைப்படத்தை தொடங்கலாம் என சிம்பு அவர்கள் நெல்சனுக்கு சிக்னல் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Leave a Comment