மிரட்டல் வில்லனாக களமிறங்கும் சிம்பு.! 10 தல படத்தின் பட்டைய கிளப்பும் புதிய போஸ்டர்.!

0

ஞானவேல் ராஜா ஸ்டூடியோ கிரீன் சார்பில் 20வது திரைப்படமாக தயாரிக்க ஆரம்பிக்கப்பட்டது தான் கன்னட திரைப்படத்தில் மெகா ஹிட் படமான முஃட்டி ரீமேக். இந்த திரைப்படத்தை நாரதன் தான் இயக்க  இருந்தார்.

ஆனால் சிம்புவின் சொதப்பலால் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. கன்னடத்தில் இந்த திரைப்படத்தை நாரதன் அவர்கள்தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த திரைப்படத்தின் கதை படி பார்த்தால் போலீசாக ஸ்ரீ முரலி நடித்திருப்பார் தமிழில் கௌதம் கார்த்திக் நடிக்க இருந்தார் அதேபோல் வில்லன் கதாபாத்திரத்தில் சிவராஜ் குமார். தமிழில் சிலம்பரசன் மிரட்டி இருப்பார்.

அதாவது ஹீரோ போலீஸ் என்பதை மறந்து மறைத்து தாதா உலகிற்கு சென்று வில்லனை மடக்க வேண்டும் என்பதுதான் கதை.  இந்த திரைப்படம் ஒரு அதிரடி ஆக்சன் திரைப் படமாக உருவாக இருக்கிறது சிம்பு ரீ என்ட்ரீக்கு பிறகு மீண்டும் இந்த திரைப்படம் துவங்க இருக்கிறது.

சிம்பு தற்போது மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. ஆனால் படத்தை இயக்க இருந்த நாரதன் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகிக் கொண்டார் அதனால் இந்த திரைப்படத்தை சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் ஆரியின் நெடுஞ்சாலை ஆகிய திரைப்படங்களை இயக்கிய கிருஷ்ணா தான் இந்த திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

இந்த நிலையில் படத்தை முழுவதுமாக இயக்க போகிறார்களா அல்லது விட்ட இடத்திலிருந்து படத்தை இயக்கப் போகிறார்கலா என்பது தெரியவில்லை.

patthu-thala
patthu-thala

மேலும் இந்த திரைப்படத்தில் கலையரசன், டிஜே அருணாச்சலம், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை சிம்பு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் சிம்பு இந்த திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் படத்தின் போஸ்டரை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ரிலீஸ் செய்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

patthu-thala
patthu-thala